அலங்கார மீன்கள்
From Wikipedia, the free encyclopedia
அலங்கார மீன்கள் (ornamental fish) என்பவை அழகியல் நோக்கங்களுக்காக வீடுகள், அலுவலகம் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த இடங்களில் கண்ணாடி, தொட்டிகளில், கலன்களில் வளர்க்கப்படும் பல்வேறு வண்ணங்களைக்கொண்ட சிறிய ரக அழகுரு மீன்கள் ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இன்று தமிழ்நாடு, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் வீடுகளில் அலங்கார வண்ண மீன்களை தொட்டியில் வளர்ப்பது ஒரு பொழுது போக்காகவும், சில சோதிட நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நடைபெற்று வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இந்த அலங்கார மீன்களை உற்பத்தி செய்யும் தொழில் அதிகரித்து வருகிறது.