அருணாசலப் பிரதேசம் (Arunachal Pradesh) இந்தியாவின் ஒரு மாநிலமாகும். அருணாச்சலப் பிரதேசம் 1987ல் மாநிலமாக அறிவிக்கப்படும் வரை, வட கிழக்கு எல்லைப்புற முகமை என்ற பெயரில் இயங்கியது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
அருணாசலப் பிரதேசம்
अरुणाचल प्रदेश | |
---|---|
Location of Arunachal Pradesh in India | |
Map of Arunachal Pradesh | |
நாடு | இந்தியா |
பிராந்தியம் | வடகிழக்கு இந்தியா |
உருவாக்கம் | 20 பெப்ருவரி 1987 |
தலை நகரம் | இட்டாநகர் |
மிகப்பெரிய நகரம் | இட்டாநகர் |
மாவட்டங்கள் | 25 |
அரசு | |
• நிர்வாகம் | அருணாச்சல பிரதேச அரசு |
• ஆளுநர் | பி. டி. மிஸ்ரா |
• முதலமைச்சர் | பெமா காண்டு (BJP) |
• சட்டமன்றம் | ஓரவை முறைமை (60 seats) |
• பதினான்காவது மக்களவை | மாநிலங்களவை 1 மக்களவை (இந்தியா) 2 |
• உயர் நீதிமன்றம் | குவஹாத்தி உயர் நீதிமன்றம் – Itanagar Bench |
பரப்பளவு | |
• மொத்தம் | 83,743 km2 (32,333 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 15th |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 13,82,611 |
• தரவரிசை | 27th |
• அடர்த்தி | 17/km2 (43/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AR |
HDI | 0.617 (medium) |
HDI rank | 18th (2005) |
படிப்பறிவு | 66.95% |
ஆட்சி மொழி | English [1] |
இணையதளம் | arunachalpradesh |
விலங்கு | Mithun |
---|---|
பறவை | மலை இருவாட்சி |
மலர் | Foxtail orchid |
மரம் | Hollong |
இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. மற்றது அக்சாய் சின்.
இம்மாநிலம் 12 நகரங்களையும்; 3649 கிராமங்களையும் கொண்டுள்ளது. 83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர்.
இம்மாநிலத்தில் 20 முக்கிய இனக்குழுக்களும், பல துணை இனக்குழுக்களும் வாழுகின்றன. ஒரு பொதுக் குழுவிலிருந்து உருவானதால், இச் சமுதாயங்களிற் பெரும்பாலானவை இனரீதியில் ஒத்தவை, எனினும் புவியியல் ரீதியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த காரணத்தால், மொழி, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் சில வேறுபட்ட சிறப்பியல்புகள் அவர்களிடையே இருப்பதைக் காணலாம்.
அவர்களுடைய சமூக-சமய ஒற்றுமையின் அடிப்படையில் இவர்களை மூன்று பண்பாட்டுக் குழுக்களாகப் பிரிக்கலாம். தவாங் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களைச் சேர்ந்த, மொன்பாஸ் மற்றும் ஷெர்டுக்பென்ஸ், லாமாயிச மரபில் வந்த மகாயான பௌத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். இதனால் இவர்கள் வாழும் கிராமங்களில் அதிக அளவில் அழகுபடுத்தப்பட்ட "கொம்பாஸ்" எனும் பௌத்த கோயில்களைக் காண முடியும். பெரும்பாலானவர்கள், படியமைப்புப் பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளும் விவசாயிகளாக இருந்த போதிலும், இவர்களிற் பலர் கவரிமா மற்றும் மலையாட்டு மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை ஒத்த பண்பாட்டைக் கொண்டவர்களே, வடக்கு எல்லையோரமுள்ள உயர்ந்த மலைகளில் வாழும் மெம்பாக்கள், கம்பாக்கள் போன்றவர்களாவர். மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் கெம்ப்டி மற்றும் சிங்போ இனத்தவர்கள் தேரவாத பௌத்தர்கள். இவர்கள் தாய்லாந்து, மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் இடம் பெயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தாயகத்தில் வழக்கிலிருந்த பண்டைய எழுத்துக்களிலிருந்து உருவான எழுத்துக்களையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இரண்டாவது குழுவினர், தொன்யி-போலோ, அபோ தானி என அழைக்கப்படும் சூரிய, சந்திரக் கடவுளர்களை வணங்கும், "அதி"கள், "அகா"க்கள், அப்தானிகள், பங்னிகள், நிஷிகள், மிஷ்மிகள், மிஜிகள், தொங்சாக்கள் போன்றவர்களாவர். இவர்களுடைய சமயக் கிரியைகள், பெரிதும் விவசாய வட்டங்களின் கட்டங்களுடன் பொருந்துகின்றன. அவர்கள் இயற்கைத் தேவதைகளுக்கு விலங்குகளைப் பலியிடுகிறார்கள். இவர்கள் பாரம்பரியமாக ஜும்மிங் அல்லது shifting பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளுகிறார்கள். அதிகளும், அப்தானிகளும் ஈர நெற் செய்கையில் பெருமளவில் ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். அப்தானிகள் அவர்களுடைய, நெல்லுடன்கூடிய மீன்வளர்ப்புக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள், ஒவ்வொரு நெற்பயிற் செய்கையிலும், இரண்டு முறை மீன் விளைவைப் பெறுவதில் நூற்றாண்டுகளாக அநுபவம் பெற்றவர்கள்.
மூன்றாவது குழுவினர், நாகலாந்தை அண்டியுள்ள திரப் மாவட்டத்தைச் சேர்ந்த நொக்டேக்கள், மற்றும் வஞ்சோக்கள் ஆவர். பாரம்பரிய கிராமத் தலைவர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கும் இக் குழுவினர் இறுக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட கிராம சமுதாயத்துக்காக, அறியப்பட்டவர்கள். நொக்டேக்கள் ஆரம்பநிலை வைஷ்ணவத்தையும் பின்பற்றி வருகிறார்கள்.
வரலாறு
வரலாற்றுக்கு முந்தைய காலம்
அருணாசலப் பிரதேசத்தில் கிடைத்த புதிய கற்காலக் கருவிகளைக் கொண்டு பார்கும்போது இமயமலைப்பகுதி உள்ளிட்ட இப்பகுதியில் மக்கள் குறைந்தது பதினொரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து வாழ்ந்து வருகின்றனர் என்று உறுதியாகிறது. இப்பிராந்தியத்தில் பழங்கால மக்கள் குடியேற்றமானது பூட்டான் மற்றும் அதன் பக்கத்தில் இமயமலைப் பகுதிகளான தெற்காசியப் பகுதிகள், சிந்து சமவெளி பகுதியிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர், இக்குடியேற்ற வரலாறு தெற்காசியாவின் வெண்கலக் காலமான பொ.ஊ.மு. 3300 க்கு முற்பட்ட காலத்தில் துவங்குகிறது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மற்றும் தென்சீனப் பகுதிகளிலிருந்து மற்ற இன குழுக்கள் வந்து குடியேறினர்.
துவக்கக்கால வரலாறு
அருணாசலப் பிரதேசத்தின் துவக்கக்கால வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. வாய்மொழி வரலாற்றுத் தகவல்களின்படி இப்பகுதி பழங்குடி மக்கள் திபெத்திய-பர்மிய பகுதியில் இருந்து குடியேறியதாக தெரிகிறது, என்றாலும் இதை உறுதிப்படுத்துவது சிரமமாக உள்ளது. பொருள் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அருணாச்சலப் பிரதேச பழங்குடிக் குழுக்கள் பர்மிய பகுதியின் மலைவாழ் பழங்குடியினர் உடன் நெருக்கமானவர்கள் என்று தெளிவாக தெரிகிறது. இப்பகுதியானது வடக்கு பர்மிய கலாச்சாரத்தின் மேற்கு நோக்கிய பரவலின் நீட்சியாக இருக்க முடியும் என்பது ஒரு உண்மை ஆகும்.
அருணாசலப் பிரதேச அரசாங்கத்தின் கூற்றின்படி, இந்து மத புராண நூல்களான காளிகா புராணம், மகாபாரதம் ஆகியவற்றில் இப்பிராந்தியத்தின் பிரபு மலைகள் குறிப்பிடப்படுகின்றன, மேலும் இங்குதான் பரசுராமர் தன் பாவங்களைக் கழுவியதாகவும், வியாசர் தியானித்ததாகவும், மன்னர் பீஷ்மக்கா தன் அரசை நிறுவியதாகவும், கிருட்டிணன் தன் துணைவியான ருக்மணியை மணந்ததாகவும் கூறப்படுகிறது.[2]
இப்பிராந்தியத்தின் பதிவுபெற்ற அதிகாரப்பூர்ர வரலாறு அஹோம் மற்றும் சுதியா ஆகிய வெளியார் கண்ணோட்டத்தின் மூலமாக மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது. இந்த பகுதியின் வடமேற்கு பாகங்கள் பொ.ஊ.மு. 500 மற்றும் பொ.ஊ. 600 ஆண்டுகளுக்கு இடையே மோன்யூலின் போன்பா பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் இப் பகுதியின், திபெத் மற்றும் பூட்டான் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மாநிலத்தின் பிற பகுதிகள் குறிப்பாக மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகள், சுதியா மன்னர்களின் கட்டுப்பாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் அஹோம்-சுதியா போர்வரை இருந்தது. ஆங்கிலேயர்களால் இந்தியா கைப்பற்றும் காலம்வரை அஹோம் மரபினரின் கட்டுப்பாட்டின்கீழ் இப்பகுதி 1858 வரை இருந்தது. என்றாலும், பெரும்பாலான அருணாச்சலப் பழங்குடியின மக்கள் 1947 இல் இந்தியா விடுதலைப் பெற்று இப்பகுதியின் உள்நாட்டு நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை இம்மக்களின் தன்னாட்சி நடைமுறையில் இருந்தது.
அண்மைய அகழ்வாய்வில் மேற்கு சியாங் மாவட்டப் பகுதியின் சியாங் மலைகளின் அடிவாரத்தில் 14 ஆம் நூற்றாண்டின் சுதியா அரசு காலத்திய இந்து சமய கோயில்களின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
மெக்மோகன் கோடு வரைதல்
1913-1914 இல், சீனா, திபெத், பிரித்தானிய இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் எல்லைக் கோட்டை முடிவு செய்வது தெடர்பாக சிம்லாவில் சந்தித்தனர்.[3] இருப்பினும், சீனப் பிரதிநிதிகள் அங்கு உடன்படிக்கைக்கு மறுத்துவிட்டனர். இந்த உடன்படிக்கையின் நோக்கம் உள் மற்றும் வெளி திபெத் மற்றும் பிரித்தானிய இந்தியா இடையே எல்லைகளை வரையறுப்பதாக இருந்தது. பிரித்தானிய நிர்வாகி சர் ஹென்றி மெக்மகன் என்பவர் சிம்லா மாநாட்டில் 550 மைல்கள் (890 கி.மீ.) நீளமுடைய பிரித்தானிய இந்தியா மற்றும் வெளி திபெத் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லையாக மக்மகன் கோட்டை வரைந்தார். மாநாட்டின் முடிவுகளை திபெத் மற்றும் பிரித்தானியப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டு, அதன்முடிவாக பிரித்தானியப் பேரரசு கேட்டதினால் தவாங் மற்றும் திபெத்தின் சில பகுதிகளை திபெத் விட்டுக்கொடுத்து. ஆனால் சீனப் பிரதிநிதி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, வெளியேறினார். இதுவே விடுதலைக்குப் பிறகு இந்திய சீனப்போருக்கு வழிவகுத்தது.
இந்திய சீனப் போர்
சுதந்திர இந்தியாவால் இப்போதைய அருணாச்சலப் பிரதேசம் வடகிழக்கு முன்னணி முகமை என்ற பெயரில் 1954 இல் உருவாக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட ஒரு தசாப்தம், சீன-இந்திய உறவுகள் சுமூகமாகவும் அமைதியாகவும் இருந்தது, ஆனால் அதன்பிறகு பிரச்சினை மறு எழுச்சிபெற்று 1962 இல் இந்திய சீனப் போருக்கு எல்லை ஒரு முக்கிய காரணமாக ஆனது.[4]
மாவட்டங்கள்
இந்த மாநிலத்தில் மொத்தம் 25 மாவட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு;
- அன்ஜாவ் மாவட்டம்
- சங்லங் மாவட்டம்
- கிழக்கு காமெங் மாவட்டம்
- மேற்கு காமெங் மாவட்டம்
- கிழக்கு சியாங் மாவட்டம்
- மேல் சியாங் மாவட்டம்
- மேற்கு சியாங் மாவட்டம்
- லோஹித் மாவட்டம்
- கீழ் சுபன்சிரி மாவட்டம்
- மேல் சுபன்சிரி மாவட்டம்
- பபும் பரே மாவட்டம்
- தவாங் மாவட்டம்
- திரப் மாவட்டம்
- கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
- மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம்
- குருங் குமே மாவட்டம்
- லோங்டிங் மாவட்டம்
- ஷி யோமி மாவட்டம்
- பக்கே-கேசாங் மாவட்டம்
- லேபா ராதா மாவட்டம்
- சியாங் மாவட்டம்
- காம்லே மாவட்டம்
மக்கள் தொகையியல்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,383,727 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.06% மக்களும், நகரப்புறங்களில் 22.94% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 26.03% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 713,912 ஆண்களும் மற்றும் 669,815 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. 83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 65.38 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.55 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.70 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 212,188 ஆக உள்ளது.[5]
சமயம்
இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 401,876 (29.04 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 27,045 (1.95 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 3,287 (0.24 %) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 418,732 (30.26 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 771 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 162,815 (11.77 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 362,55 (26.20 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 6,648 (0.48 %) ஆகவும் உள்ளது.
மொழிகள்
பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்துடன் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது.
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.