அரசவால் ஈபிடிப்பான்
இந்திய அரசவால் ஈபிடிப்பான் ஆசியாவினைத் தாயகமாக கொண்ட பறவை / From Wikipedia, the free encyclopedia
இந்திய அரசவால் ஈபிடிப்பான் (Indian paradise flycatcher) அல்லது வேதிவால் குருவி[2] (Terpsiphone paradisi)[3][4] என்பது நடுத்தர அளவிலான ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட பறவையாகும். ஆண் பறவை நீளமான வாலுடன் காணப்படும். இவற்றில் சில கருப்பு மற்றும் செந்நிற இறகுகளுடனும், சில வெண்நிற சிறகுடனும் காணப்படும். பெண் பறவைகள் குறுகிய வாலுடனும் செந்நிற இறக்கைகளுடனும் கருப்பு நிற தலையுடனும் காணப்படும். இவை பூச்சிகளை அடர்த்தியான மரங்களின் கீழே பறக்கும்போது பிடித்து உண்ணும். இப்பறவை மத்தியப் பிரதேச மாநிலப்பறவையாகும்.
விரைவான உண்மைகள் இந்திய அரசவால் ஈபிடிப்பான், காப்பு நிலை ...
இந்திய அரசவால் ஈபிடிப்பான் | |
---|---|
இலங்கையில் ஆண் குருவி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | மோனார்க்கிடே |
பேரினம்: | தெர்ப்சிபோன் |
இனம்: | தெ. பரதிசி |
இருசொற் பெயரீடு | |
தெர்ப்சிபோன் பரதிசி (கரோலஸ் லின்னேயஸ், 1758) | |
வேறு பெயர்கள் | |
தெசித்ரே பரதிசி |
மூடு