![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Adyar_estuary.jpg/640px-Adyar_estuary.jpg&w=640&q=50)
அடையாறு (ஆறு)
From Wikipedia, the free encyclopedia
அடையார் ஆறு (Adayar River) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னை நகரில் ஓடும் மூன்று ஆறுகளில் ஒன்று ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் மணிமங்கலத்தில் உருவாகும் இந்த ஆறு சென்னையில் உள்ள அடையாறு பகுதில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 42.5 கிலோமீட்டர் அல்லது 26.4 மைல் நீளம் கொண்ட இந்நதி சென்னையின் சுற்றுச்சூழல் கழிமுக அமைப்புக்கு பங்களிக்கிறது. அதிக மாசு அளவு இருந்தபோதிலும், படகு மற்றும் மீன்பிடித்தல் இந்த ஆற்றில் நடைபெறுகிறது. நகரத்தின் மழைநீர், சிறிய ஓடைகள் நீர், ஏரிநீர், போன்ற இடங்களிலிருந்து வரும் உபரி நீர் இந்த ஆற்றில் கலக்கிறது. சுமார் 860 சதுர கிலோமீட்டர்கள் அல்லது 331 சதுரமைல் பரப்புள்ள நகரத்திலிருந்து பெரும்பாலான கழிவுகள் இந்த நதியில் வடிகட்டப்படுகின்றன.
விரைவான உண்மைகள் அடையாறு ஆறு Adyar, அமைவு ...
அடையாறு ஆறு Adyar | |
---|---|
![]() | |
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
நகரம் | சென்னை |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | ஆலந்தூர் ஏரி |
⁃ அமைவு | மணிமங்கலம், காஞ்சிபுரம், தமிழ்நாடு, இந்தியா |
முகத்துவாரம் | அடையாறு |
⁃ அமைவு | வங்காள விரிகுடா, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
நீளம் | 26 mi (42 km) |
வடிநில அளவு | 204 sq mi (530 km2) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | அடையாறு, சென்னை |
மூடு