From Wikipedia, the free encyclopedia
வெடியூசி (firing pin, ஃபையரிங் பின்) அல்லது அடிப்பான்(striker, ஸ்ட்ரைக்கர்) என்பது, சுடுகலன் அல்லது (எம்14 கண்ணிவெடி போன்ற) வெடிகளில் உள்ள, வெடிக்கும் இயக்கமுறையின் ஒரு கூறு / பாகம் ஆகும்.
(மிதிவெடிகள், எறிகணைகள், கொத்துக் குண்டுகள் மற்றும் கையெறிகுண்டுகள் முதலியன போன்ற) ஒருமுறை-உபயோக சாதனங்களுக்கான வெடித்தூண்டியில் (fuze) பயன்படுத்தப்படும் வெடியூசி, கூரான முனையுடன் இருக்கும். மாறாக, சுடுகலன்களில் உள்ள வெடியூசிகள், வெடிபொதியின் எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு சிறிய, வட்டமுனையுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும்.[1][2][3]
பொதுவாக எஃகு, அலுமினியக் கலப்புலோகம், அல்லது தைட்டானியம் ஆகியவற்றால் வெடியூசிகளும், அடிப்பான்களும் செய்யப்படும். குறைவுலோக மிதிவெடிகளைப் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில், கண்ணாடிப் பீங்கான் போன்று உலோகமில்லா பொருட்கள் பயன்படுத்தப்படும்.
வெடியூசி என்பது, சுருள்வில்-பூட்டிய சுத்தியலின் ஆற்றலை எரியூட்டிக்கு வழங்கும், ஒரு எடைகுறைவான கூறு ஆகும். மேலும், அடிப்பான் என்பது நேரடியாக சுருள்வில்லுடன் பூட்டப்பட்டிருப்பதால், அதுவேதான் எரியூட்டியை தாக்கி ஆற்றலை வழங்கும்; இதன் எடை வெடியூசியைவிட அதிகமாக இருக்கும். சுத்தியல் மற்றும் வெடியூசியின் செயல்பாடுகள், அடிப்பானில் ஒருங்கிணைவதால்; அடிப்பான் இயங்குமுறைகள் பொதுவாகவே எளிமையாக இருக்கும்.[1]
பொதுவாக, தொடர்ந்துசுடும் சுடுகலனின் ஆணியில், வெடியூசி அல்லது அடிப்பான் அமைந்திருக்கும். ஆணியில்லாத, சுழல்-கைத்துப்பாக்கிகள் மற்றும் பலவகையிலான ஒற்றைக்குண்டு இயக்கங்களில் மிகச்சிறிய வெடியூசி, அல்லது சுத்தியலோடு இணைந்த வெடியூசி இருக்கும். இவ்வகை சுடுகலங்கள் பெருபாலனவை, அடிப்பானை கொண்டிருப்பது இல்லை, ஏனெனில் அடிப்பான் இயங்குமுறையை அதில் பொறுத்த போதுமான இடம் இருப்பதில்லை. அரை-தானியக்க கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆணி-இயக்க சுடுகலங்களில் அடிப்பான்களை காணலாம்.[1]
ஒரு வழக்கமான வெடியூசி என்பது, எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு அரைகோள வடிவிலுள்ள முனை உடைய, ஒரு சிறு கம்பி ஆகும்.
அடிப்படையில் அடிப்பாங்கள் சுருள்வில்-பூட்டிய வெடியூசிகளே ஆகும், பொதுவாக ஒன்று- அல்லது இரு-கூறுகளாக இருக்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.