அக்கியோ மொறிட்டாஅல்லது அக்கியோ மொரீட்டா(盛田昭夫 Morita Akio, நகோயா, ஜப்பான், ஜனவரி 26, 1921 - அக்டோபர் 03, 1999) மின்னியல் துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து உலகின் முன்னனி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். ஜப்பானியத் தொழில் முனைவர் ; மேடு இன் ஜப்பான் (Made in Japan) என்ற புகழ் பெற்ற தன்வரலாற்று நூலை எழுதியவர்.

விரைவான உண்மைகள் அக்கியோ மொரீட்டா, பிறப்பு ...
அக்கியோ மொரீட்டா
Thumb
Akio Morita
பிறப்பு(1921-01-26)சனவரி 26, 1921
Nagoya, Aichi, Japan[1]
இறப்புஅக்டோபர் 3, 1999(1999-10-03) (அகவை 78)
Tokyo, Japan
தேசியம்Japanese
அறியப்படுவதுSony
மூடு

இளமை

1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரீட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரீட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என அவரது தந்தை விரும்பினார் அதனால் பள்ளியில் படித்தபோதே மொரீட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன. சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை கழற்றி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் ஆர்வமுடன் இருந்தார்.பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார்.[2]

பணி

பட்டப்படிப்பு முடிந்ததும் ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றினார். அந்த சமயத்தில் மசாரு இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலாயினும் வளர்ச்சிக்கு இடமில்லாத மதுபானத் தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

1946 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் குண்டுகள் துளைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதி வாரி கடையில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 [2] முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவனம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் மொரீட்டா.

அந்த நிறுவனம் உருவாக்கிய முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. மிகப்பெரியதாக இருந்தது. மேலும் போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. எனவே மொரீட்டா அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து வானொலிக்கான(டிரான்ஸ்சிஸ்டருக்கான) உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான்.

சோனி பெயருவாக்கம்

தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 இல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார்.

வாக்மேன்

Thumb
சோனியின் முதல் வாக்மேன்

இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வகையில் மாறுபட்ட மின்னியல் பொருட்களைச் செய்வதில் மொரீட்டா ஈடுபட்டார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. அவ்வாறு உருவானதே வாக்மேன் ஆகும். தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் ஒலிப்பதிவுக்கருவி கொண்டு வருவதையும் அதிலிருந்த வசதியின்மையும் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார்.

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரீட்டாவின் தொழில் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, ஒளிப்பதிவுக் கருவி எனப் பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரீட்டாவின் தலைமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு மிகப் பிடித்த சின்னமாகத் தேர்ந்தெடுத்தனர்.

ஓய்வு

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் புகழ் பெற்றது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரீட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விலகினார்.

மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட ஒலிப்பதிவுக் கருவி தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவரிடம் சோனி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலைமை நிறுவன பொறுப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.

இறுதிக்காலம்

தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்கியோ மொரீட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் இதழ் வெளியிட்ட உலகப் பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் இதழ் வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்கியோ மொரீட்டாதான்.

சிறப்பு

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது,பிரான்ஸின் மிக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது,ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.

படைப்புகள்

இவரது தன்வரலாற்று நூல் மேட் இன் ஜப்பான்(Made in Japan) என்பதாகும். 1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிபெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரீட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி.

உசாத்துணை

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.