Map Graph

யாசுச்வு

'யசுச்சு (Yasuj)(பாரசீக மொழி: ‎; யசஜ், யசூஜ், யெஸ்ஜ் என்றும் ரோமானிய ஒலியால் அழைக்கப் படுகிறது; Lurish : یاسووج Jasuc அல்லது یاسیچ Jasyç ) ஈரானின் கோகிலுயே மற்றும் போயர்-அஹ்மத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். 2006 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அதன் மக்கள் தொகை 20,297 குடும்பங்கள், மொத்தம் 96,786 நபர்களைப் பெற்று இருந்தது. தென்மேற்கு ஈரானில் காணப்படும், ஜாக்ரோஸ் மலைகளில் அமைந்து உள்ள ஒரு தொழில்துறை நகரம், யாசுச்வு நகரம் ஆகும். யாசுச்வு என்ற சொல்லானது, இந்த முழுவட்டாரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. யாசுச்வு நகரில், சர்க்கரைப் பதப்படுத்தும் தொழிற்சாலையையும், நிலக்கரியை எரித்து, மின்சாரம் உற்பத்தி செய்யப்படும், அனல் மின் நிலையத்தையும் பெற்று, இருபெரும் அடிப்படைத் தேவைகளை, இந்நகருக்கு நிறைவு செய்கிறது.யாசுச்வு மக்கள் லூரி மொழியைப் பேசுகிறார்கள்.

Read article