Map Graph

மேற்குச் சுவர்

மேற்குச் சுவர், அழுகைச் சுவர்/புலம்பற் சுவர் எருசலேம் பழைய நகரில் கோவில் மலையின் மேற்கில் அமைந்துள்ளது. இது யூத தேவாலயத்தை சுற்றிக் காணப்பட்ட சுவரின் எஞ்சிய பகுதியும், மலை கோயிலுக்கு அடுத்த அதி புனித இடமுமாக யூதத்தில் காணப்படுகிறது. 17 தொடர்கள் உட்பட்ட அரைவாசி சுவர் வீதி மட்டத்திலிருந்து கீழே உள்ளன. இது இரண்டாம் கோவிலின் இறுதி காலத்திற்குரியனவென்றும், கி.மு. 19 இல் முதலாம் ஏரோதால் கட்டப்பட்டதென்றும் பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், அன்மைய ஆய்வு ஏரோதின் காலத்தில் வேலைகள் பூர்த்தியாகவில்லையென்பதை குறிப்பிடுகிறது. எஞ்சிய அடுக்கின் பகுதிகள் 7ம் நூற்றாண்டின் பின்பு இடம்பெற்றன. மேற்குச் சுவர் என்பது யூத பகுதியில் தெரியும் பெரிய சதுக்கம் மட்டுமல்ல, முழு கோயில் மலையையும் உள்ளடக்கிய மறைந்து கிடக்கும் அதன் கட்டமைப்பு என்பனவுமாகும். இசலாமியர் வாழும் பகுதியில் காணப்படும் 25 அடி பகுதியான சிறிய மேற்குச் சுவரும் இதனுள் அடங்கும்.

Read article
படிமம்:Westernwall2.jpgபடிமம்:Commons-logo-2.svgபடிமம்:OldCityJerusalem.svg