Map Graph

மாசலசின் சமாதி

மாசலிசின் மோசலீயம், ஹலிகர்னாசிலுள்ள மோசலீயம் அல்லது மாசலசின் சமாதி கி.மு 353- கிமு 350க்கு இடையில் ஹலிகார்னசஸ் என்னுமிடத்தில் மாசலஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. இது ஏறத்தாழ 45 மீட்டர் உயரமும் நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளைத் தாங்கியிருந்தது. இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தனர்.

Read article
படிமம்:Mausoleum_at_Halicarnassus_at_the_Bodrum_Museum_of_Underwater_Archaeology.jpgபடிமம்:Turkey_relief_location_map.jpgபடிமம்:West_Asia_non_political_with_water_system.jpg