Map Graph

பேரர்

ஐதராபாத் இராச்சியத்தின் வடக்கில் இருந்த பிரித்தானிய இந்திய மாகாணம்

பேரர் மாகாணம், முன்னர் இது பேரரர் சுல்தானமாகவிளங்கியது. இதன் தலைநகரம் அச்சல்பூர் ஆகும். கிபி 1490 முதல் பாமினி சுல்தானகம், பேரர் சுல்தானகத்தை தன்னுடன் இணைத்து கொண்டது. பின்னர் 1881-இல் ஐதராபாத் இராச்சியத்தின் பகுதியாக பேரர் இருந்தது. 5 நவம்பர் 1902-இல் பேரர் பகுதியை பிரித்தானிய இந்தியாவின் நிஜாமிடமிருந்து ஆண்டு குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மத்திய மாகாணத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இணைக்கப்பட்டது. 1881-இல் பேரரர் பகுதியின் மக்கள்தொகை 26,72,673 ஆக இருந்தது. பேரர் மக்கள் பெரும்பாலும் மராத்தி மொழி பேசுகின்றனர். பேரர் பகுதியின் மொத்தப் பரப்பளவு 1,13,281 சகிமீ ஆகும். இந்திய விடுதலைக்குப் பின் தற்போது பேரர் விதர்பா எனும் பெயரில் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளது.

Read article
படிமம்:Asafia_flag_of_Hyderabad_State.pngபடிமம்:Hyderabad_and_Berar_1903.jpgபடிமம்:Map_of_the_Hyderabad_princely_state_(1909).svg