தூணக்கடவு அணை
தூணக்கடவு அணை கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கமாகும். தமிழ்நாட்டின் முதல்வராக திரு. காமராசர் அவர்கள் இருந்த பொழுது அவரது தலைமையிலான அரசினால் இந்த அணை கட்டப்பட்டது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் வரும் இந்த அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழ்நாடு அரசு கவனித்துக்கொண்டாலும் இந்த அணை கேரள மாநில எல்லைக்குள் வருவதால் அணையின் உரிமை கேரள அரசிற்கு சொந்தமாகும். இந்த அணையின் மொத்தக் கொள்ளளவு இருபத்தி இரண்டு அடியாகும். பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தின் எல்லைக்குள் உள்ள இந்த அணைக்கு பரம்பிக்குளம் அணை, தூணக்கடவு ஆறு, பெருவாரிப்பள்ளம் அணை, மலை, வனப்பகுதிகளில் இருந்து நீர் வரத்து உள்ளது.
Read article