Map Graph

துவாரகா, தில்லி

துவாரகாஇந்தியாவின் தேசியத் தலைநகர் பகுதியான தில்லியில் அமைந்த பகுதிகளில் ஒன்றாகும். இது தென்மேற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதி ஆகும். இது புது தில்லிக்கு தென்மேற்கே 21.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. துவாரகாவிற்கு கிழக்கே 11.2 கிலோ மீட்டர் தொலைவில் இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது. துவாரகாவிற்கு தெற்கே 18.8 கிலோ மீட்டர் தொலைவில் அரியானா மாநிலத்தின் குருகிராம் நகரம் உள்ளது. இது துவராகா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

Read article