Map Graph

ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)

ஜந்தர் மந்தர், 19 வானியல் கருவிகளின் தொகுப்புகளைக் கொண்டு ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஓர் நினைவிடமாகும். ஜெய்ப்பூரைக் கட்டமைத்த இராஜபுத்திர அரசன் சவாய் இரண்டாம் ஜெய் சிங்கினால் இந்த வானியில் கருவிகள் கட்டமைக்கப்பட்டன. இந்த நினைவிடம் 1734 இல் கட்டிமுடிக்கப்பட்டது. இங்கு உலகின் மிகப்பெரிய கல்லாலான சூரிய மணிகாட்டி உள்ளது. யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஜெய்ப்பூர் நகர அரண்மனை, ஹவா மஹால் ஆகிய இரு முக்கியமான இடங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள கருவிகளைக் கொண்டு வானியல் நிலைகளைச் சாதாரணக் கண்களைக் கொண்டே காணலாம். பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் காணப்பட்ட தொலமியின் வானியியலுக்கு இந்த வான் ஆய்வுக்கூடம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

Read article
படிமம்:Jantar_Mantar_at_Jaipur.jpgபடிமம்:Jaipur_City_Map.svgபடிமம்:India_Rajasthan_relief_map.svgபடிமம்:India_relief_location_map.jpgபடிமம்:Jantar_Mantar_in_Jaipur_giant_sundial.jpgபடிமம்:Sundial_Close-up_at_the_Jantar_Mantar.jpgபடிமம்:Yantra_Raj.jpgபடிமம்:Unnatamsa_Yantra.jpg