Map Graph

சிமித்சோனிய நிறுவனம்

சிமித்சோனிய நிறுவனம் என்பது, 1846ல் "அறிவை வளர்ப்பதற்கும் பரப்புவதற்குமாக அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம். பல அருங்காட்சியகங்களையும், ஆய்வு மையங்களையும் உள்ளடக்கிய இந்நிறுவனம், ஐக்கிய அமெரிக்க அரசினால் நிர்வகிக்கப்படுகிறது. தொடக்கத்தில் "ஐக்கிய அமெரிக்கத் தேசிய அருங்காட்சியகம்" என்ற பெயரில் இது அமைக்கப்பட்டது. 1967ல் இப்பெயர் ஒரு நிர்வாக அமைப்பாக இல்லாமல் போய்விட்டது. சிமித்சோனிய நிறுவனம் 138 மில்லியன் பல்வேறுபட்ட பொருட்களையும், பத்தொன்பது அருங்காட்சியகங்கள், ஒன்பது ஆய்வு மையங்கள், ஒரு விலங்கினக் காட்சியகம் ஆகியவற்றுடன் பெரும்பாலும் கொலம்பியா மாவட்டத்தில் அடங்கும் வரலாறு மற்றும் கட்டிடக்கலை அடையாளச் சின்னங்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. அரிசோனா, மேரிலாந்து, மசச்சூசெட்சு, நியூயார்க் நகரம், வெர்சீனியா டெக்சாசு, பனாமா ஆகிய இடங்களிலு கூடுதல் வசதிகள் உள்ளன. அமெரிக்காவின் 45 மாநிலங்களிலும், பியூட்டோரிக்கோ, பனாமா ஆகிய நாடுகளையும் சேர்ந்த 200 நிறுவனங்களும், அருங்காட்சியகங்களும் சிமித்சோனிய நிறுவனத்தின் இணைந்த அமைப்புக்களாக உள்ளன. ஆண்டொன்றுக்கு இங்கு வரும் 30 மில்லியன் வருகையாளர்களிடம் இருந்து நுழைவுக் கட்டணம் எதுவும் அறவிடப்படுவதில்லை. நிறுவனத்தின் ஓராண்டுச் செலவு $1.2 பில்லியன். இதில் 2/3 பங்கு அமெரிக்க அரசினால் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து கிடைக்கிறது. பிற வருமானங்களில், நிறுவனத்தின் அறக்கொடைகள், தனியாட்களும் நிறுவனங்களும் வழங்கும் நிதி, சாந்தா, உரிமங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் என்பன அடங்குகின்றன. இந்நிறுவனம் சிமித்சோனியன், ஏர் அன்ட் இசுப்பேசு ஆகிய இது இதழ்களை வெளியிடுகிறது.

Read article
படிமம்:Smithsonian_logo_color.svgபடிமம்:Flag_of_the_Smithsonian_Institution.svgபடிமம்:Smithsonian_Building_NR.jpg