Map Graph

சரோனிக் வளைகுடா

கிரேக்க நாட்டில் உள்ள ஒரு வளைகுடா

சரோனிக் வளைகுடா அல்லது ஏஜினா வளைகுடா என்பது கிரேக்கதில், அட்டிகா மற்றும் ஆர்கோலிஸ் தீபகற்பங்களுக்கு இடையே உள்ள ஒரு வளைகுடா ஆகும். இது ஏஜியன் கடலின் ஒரு பகுதியாகும். இது கொரிந்தின் பூசந்தியின் கிழக்குப் பகுதியை வரையறுக்கிறது, மேலும் இது கொரிந்து கால்வாயின் கிழக்கு முனையாகும். வளைகுடாவில் உள்ள சரோனிக் தீவுகள் கிரேக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றவை. வளைகுடாவில் உள்ள மிகப்பெரிய தீவான, சலாமிஸ் தீவின் பெயரில், கிரேக்க பாரசீகப் போர்களில் குறிப்பிடத்தக்க கடற்படைப் போரான சலாமிஸ் போர் அழைக்கப்படுகிறது. மெகாரா வளைகுடா சரோனிக் வளைகுடாவின் வடக்கு முனையாக உள்ளது.

Read article
படிமம்:Argo-saronic_EN.JPGபடிமம்:Greece_relief_location_map.jpgபடிமம்:Poros_panorama.jpg