Map Graph

சந்தன்நகர்

மேற்கு வங்கத்தில் உள்ள நகரம், இந்தியா

சந்தன்நகர் (Chandannagar, முன்னதாக சந்தர்நகோர் அல்லது சந்தர்நகர், இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிற்கு வடக்கே 30 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்றமும் சிறிய நகரமும் ஆகும். ஊக்ளி மாவட்டத்தில் ஓர் வட்டத்தின் தலைநகரமாகும். மேற்கு வங்காளத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகளில் ஒன்றாகும். கொல்கத்தா பெருநகர வளர்ச்சி ஆணையத்தின் ஆள்பகுதிக்குள் உள்ளது. ஊக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் வங்கத்தின் பிற நகரங்களிலிருந்து தனிப்பட்டு தன் அடையாளத்தைக் கொண்டுள்ளது. 150,000 மக்கள்தொகையுள்ள இதன் மொத்த நிலப்பரப்பு 19 சதுர கிலோமீட்டர்கள் தான். தலைநகர் கொல்கத்தாவுடன் தொடர்வண்டி, சாலைகள் மற்றும் நீர்ப்போக்குவரத்தால் இணைக்கப்பட்டுள்ளது. ஒருமணிப் பயணத்தில் எட்டக்கூடியதாக உள்ளது.

Read article
படிமம்:India_West_Bengal_location_map.svgபடிமம்:Sacred_Heart_Church_-_Chandan_Nagar_-_Hooghly_-_2013-05-19_7893-7894.JPGபடிமம்:Commons-logo-2.svg