Map Graph

கேப் முனை

கேப் முனை ஆப்பிரிக்காவின் தென்மேற்குக் கோடியில் தென்னாப்பிரிக்காவின் கேப் மூவலந்தீவின் தென்கிழக்கு கோடியில் கடலுள் நீட்டிக்கொண்டிருக்கும் மலையின் முனையாகும். இது மலைப்பாங்கான அழகான பகுதியாகும்; வடக்கு-தெற்காக ஏறத்தாழ முப்பது கி.மீ தொலைவிற்கு அமைந்துள்ளது. இந்த மூவலந்தீவின் வடக்கு கோடியில் கேப் டவுன் நகரமும் மேசை மலையும் அமைந்துள்ளன. இந்த முனை 34°21′26″S 18°29′51″E, நன்னம்பிக்கை முனைக்கு கிழக்கே ஏறத்தாழ 2.3 கிலோமீட்டர்கள் (1.4 மைல்கள்) உள்ளது. இந்த இரு பாறையாலான முனைகளும் நன்றாக அறியப்பட்டாலும் இவை இரண்டுமே ஆபிரிக்க பெருநிலத்தின் தெற்குக் கோடிமுனை இல்லை; ஆப்பிரிக்காவின் மிகுந்த தெற்கிலுள்ள தென்முனை கேப் அகுல்யாசு ஆகும். இது இங்கிருந்து கிழக்கு-தென்கிழக்கில் ஏறத்தாழ 150 கிலோமீட்டர்கள் (93 mi) தொலைவில் உள்ளது.

Read article
படிமம்:View_at_Cape_Point.JPGபடிமம்:Lighthouse_Cape_Point,_South_Africa.JPGபடிமம்:Kap-der-guten-hoffnung.JPG