காக்ரா ஆறு
காக்ரா ஆறு அல்லது கர்னாலி ஆறு இமயமலையின் திபெத் பகுதியில் அமைந்த சிவாலிக் மலையின் 3962 மீட்டர் உயரத்தில் உள்ள மாப்சாசுங்கோ கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகி, மானசரோவர் வழியாக நேபாளத்தை அடைந்து, பின் இந்தியாவை வந்தடைந்து, பிகார் மாநிலத்தின் தலைநகரம் பாட்னா அருகே கங்கை ஆற்றில் கலக்கிறது. நேபாளத்தில் 507 கிலோ மீட்டர் நீளம் பாயும் காக்ரா ஆற்றின் மொத்த நீளம் 1080 கிலோ மீட்டராகும். இதன் மொத்த வடிநிலப் பரப்பு 1,27,950 சதுர கிலோ மீட்டராகும். கங்கை ஆற்றின் நீண்ட துணை ஆறுகளில் யமுனை ஆற்றுக்கு அடுத்து காக்ரா ஆறு இரண்டாவதாக உள்ளது.
Read article