Map Graph

கராச்சி

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுள் ஒன்று. சிந்த் மாகாணத்தின் தலைநகரம்.

கராச்சி பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமும் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும், சிந்த் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். மேலும் இது உலகில் இரண்டாவது மிகுதியான மக்கள் தொகை கொண்ட நகரமாக உள்ளது. உலக அளவில் நகர மக்கள்தொகை தரவரிசையில், இது உலகில் 12 வது மிகப்பெரிய நகரமாகும். இது ஒரு உலகளாவிய நகரமாக கருதப்படுகிறது. 1958க்கு முன்பு வரை இதுவே பாகிஸ்தானின் தலைநகராக இருந்தது. பாகிஸ்தானின் முதன்மையான தொழில் நகராகவும், வணிக தலைநகரமாகவும் உள்ளது. கராச்சி பாக்கிஸ்தானின் பெரிய பல்வள இயைபு நகரமும் ஆகும். அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள கராச்சி ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக விளங்குகிறது, பாகிஸ்தானின் இரண்டு மிகப்பெரிய துறைமுகங்களான, கராச்சி துறைமுகமும், பிங் காசிம் துறைமுகத்தையும் இந்நகரம் கொண்டுள்ளது. மேலும் பாகிஸ்தானின் பரபரப்பான வானூர்தி நிலையமாகுமான ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கே உள்ளது.

Read article
படிமம்:Karachimontage.jpgபடிமம்:Sindh_Maps.svgபடிமம்:Pakistan_location_map.svg