Map Graph

கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம்

ஆசியாவின் மிகப்பெரிய குதிரை குளம்பு வடிவ நன்னீர் ஏரி

கன்வர் ஏரி பறவைகள் சரணாலயம் மற்றும் கன்வர் தால் அல்லது கபர் தால் ; இது, இந்தியாவின், பிகார் மாநில பேகூசராய் நகரத்தின் அருகில் அமைந்துள்ள நன்னீர் ஏரியாகும். ஆசியாவின் பேரேரிகளில் ஒன்றாக கருதப்படும் இது, இந்தியாவின் கிழக்கு இராசத்தான் மாநில பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கேவலாதேவ் தேசியப் பூங்காவை விட மும்மடங்கு பெரியதாகம். 67.5 கிலோமீட்டர் (67.5 km²) பரப்பளவுக் கொண்ட இந்த ஏரியில், சுமார் 106 பறவையினங்கள் வசிப்பதாகவும், குளிர்க்காலங்களில், மத்திய ஆசியாவிலிருந்து சுமார் 60 பறவையினங்கள் இடம் பெயருவதாகவும், உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநர் சலீம் அலி என்பவர் பதிவு செய்யப்பட்டள்ளார்.

Read article