அட்டோக் கோட்டை
அட்டோக் கோட்டை என்பது சிந்து ஆற்றைக் கடந்து செல்லும் தனது படைகளை பாதுகாப்பதற்காக பேரரசர் அக்பரிடம் அமைச்சராகவும் கட்டுமான கண்காணிப்பாளராகவும் இருந்த கவாஜா சம்சுதீன் கவாபி என்பவரின் மேற்பார்வையில் அக்பரின் ஆட்சியின் போது அட்டோக் குர்தில் 1581 முதல் 1583 வரை கட்டப்பட்ட ஒரு கோட்டையாகும். அட்டோக் 1758 ஏப்ரல் 28 அன்று மராட்டிய பேரரசால் கைப்பற்றப்பட்டு சிலகாலம் வடக்கு எல்லையாக இருந்தது. அகமது ஷா துரானி அட்டோக்கை மீண்டும் கைப்பற்றி, மூன்றாம் பானிபட் போருக்குப் பிறகு வடக்கில் மராட்டிய முன்னேற்றத்தை நிரந்தரமாக நிறுத்தினார். அட்டோக் போரின் போது ஆப்கான்-சீக்கியப் போர்களில் இது ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.
Read article
Nearby Places
காபுல் ஆறு