From Wikipedia, the free encyclopedia
2021 கனடா செவ்விந்திய உறைவிடப் பள்ளிகளில் பிணக்குழிகள் கண்டுபிடிப்பு (2021 Canadian Indian residential schools gravesite discoveries) கனடா நாட்டின் பிரிட்டிசு கொலம்பியா, சஸ்காச்சுவான் மற்றும் மானிட்டோபா மாகாணங்களில் கிறித்துவச் சபைகளால் 1863 முதல் 1998-ஆம் ஆண்டு வரை இயங்கிக் கொண்டிருந்த கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான உறைவிடப்பள்ளி வளாகங்களின் தரைக்கு அடியில் உள்ள பொருட்களை ஆய்வு செய்யும் திறன் படைத்த ரேடர் கருவிகளைக் கொண்டு மே மற்றும் சூன் 2021 மாதங்களில் ஆய்வு செய்கையில், செவ்விந்தியர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கனடியப் பழங்குடி குழந்தைககளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பண்பாட்டுப் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின குழந்தைகளில் 3 வயதுக் குழந்தைகளும் அடங்குவர். கனடாவின் பழங்குடி மக்களை மறைமுகமாக கிறித்துவ மத மாற்றத்திற்காக, பழங்குடி மக்களின் மொழி, பண்பாடு ஆகியவைகளை அழித்து, ஐரோப்பிய பண்பாடு, கிறித்துவச் சமயத்திற்கு வலுக்கட்டாயமாக மாற்றவும் இந்த உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டதன. கனடா அரசு உறைவிடப் பள்ளிகளின் வளாகப் புதைகுழிகளில் மரணித்த 2,800 குழந்தைகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது.[2]
நாள் | மே 28, 2021 | — தற்போது வரை
---|---|
அமைவிடம் |
|
காரணம் | கனடியப் பழங்குடி குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளிகள் |
இறப்புகள் | 1,665+ (தற்போது வரை)[1] |
3 வயதிற்கு மேற்பட்ட கனடாவின் பழங்குடி குழந்தைகளை, அவர்களின் பெற்றோரிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து, குழந்தைகளை கத்தோலிக்க திருச்சபையினர் நடத்தும் உறைவிடப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். உறைவிடப் பள்ளிகளில் குழந்தைகளை கிறித்துவ சமயம் மற்றும் ஐரோப்பியப் பண்பாட்டில் வளர்வதற்கும், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி களில் எழுதவும், படிக்கவும், பேசுவும் மற்றும் பழங்குடிகளின் பண்பாடு மற்றும் மொழியை மறக்கவும் கல்வி பயிலப்பட்டது. கனடாவின் பழங்குடி குழந்தைகளை உறைவிடப்பள்ளிகளில் தங்கிப்படிக்கும் திட்டத்தை கனடிய அரசு 1863-ஆம் ஆண்டு துவக்கியது.[3][4] இது போன்ற பழங்குடி மக்களை கிறித்துவ சமயத்திற்கு கட்டாய மதம் மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்ட உறைவிடப் பள்ளிகள் கனடாவில் 120 ஆண்டுகளுக்கும் மேலாக 1996-ஆம் ஆண்டு வரை இயங்கியது. இந்த உறைவிடப்பள்ளிகளில் படிக்கும் பழங்குடி குழுந்தைகளின் இறப்பு விகிதம் ஆண்டிற்கு 20 குழந்தைகளுக்கு 1 எனும் வீதத்தில் இருந்தது.[5][6] சவக்குழிகளில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 3,200 முதல் 30,000 வரை மதிப்பிடப்பட்டுள்ளது.[7][8]
2007-ஆம் ஆண்டில் உறைவிடப் பள்ளியில் படிக்கும் பழங்குடி குழந்தைகள் காணாமல் போவது, அடிக்கடி குழந்தைகள் இறத்தல் மற்றும் இறந்து புதைக்கப்பட்ட குழந்தைகள் குறித்து உண்மை கண்டறிதல் மற்றும் தீர்வு காணும் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டது. கனடாவைச் சேர்ந்த உண்மை கண்டறியும் ஆணையம் (டிஆர்சி) என்ற அமைப்பு, கத்தோலிக்க தேவாலய நிர்வாகங்கள் நடத்திய பழங்குடி குழந்தைகள் உறைவிட பள்ளிகள் குறித்து சுமார் 6 ஆண்டுகள் விசாரணை நடத்தி வெளியிட்ட அறிக்கையில் சுமார் 4,100 பேர் காணாமல் போய் உள்ளதாக கணக்கிட்டுள்ளது. பழங்குடியின தலைவர்களின் கூற்றுப்படி, "உறைவிட பள்ளிகளில் கல்வி பயின்ற சுமார் 6,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்கின்றனர். குழந்தைகளின் இறப்பை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் மறைத்துள்ளன. மேலும் இது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. கம்லூப்ஸ் பள்ளியில் 52 குழந்தைகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சூன், 2021-இல் இப்பள்ளியின் புதைகுழிகளில் 215 குழந்தைகளின் எலும்புகூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த உறைவிடப் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கும் போது இறந்து போன அல்லது காணாமல் போன பழங்குடி குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நட்ட ஈடு தரும் பொருட்டு $1.5 மில்லியன் டாலர் பணம் வழங்க, இந்த ஆணையம் கனடா அரசுக்கு 2009-ஆம் ஆண்டில் பரிந்துரை செய்தது. ஆனால் கனடா அரசு இப்பரிந்துரையை ஏற்க மறுத்து விட்டது.[6] ஆராய்ச்சியாளர்கள் உறைவிடப்பள்ளி வளாகத்தில் செயற்கைக் கோள் கருவிகளுடன் ஆய்வு செய்த போது கண்டுபிடிக்கப்பட்ட பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகளை ஆவணப்படுத்தியது. ஆனால் கனடா அரசு இதனைப் புறந்தள்ளியது.[9]:1 [10]
முதன்முதலில் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தில் 28 மே 2021 அன்று காம்லூப்ஸ் செவ்விந்தியப் பழங்குடிகள் உறைவிடப்பள்ளி வளாகத்தில், தரைக்கடியில் உள்ள பொருட்களை கண்டறியும் ரேடார் கருவியுடன் ஆய்வு செய்த போது, 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் ஒரே புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டது.[11][12][13][14][15][16]
1 சூலை 2021 அன்று புனித யூஜின்ஸ் உறைவிட பள்ளி அருகே 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்து. இந்த கல்லறைகளில் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள், அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் பழங்குடி மாணவர்களின் உடல்களா என்பதை கண்டறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.[17] விசாரணையில் மேலும் பல கல்லறைகள் கண்டுபிடிக்கப்படுகிறது. செயின்ட் யூஜின்ஸ் உறைவிடப்பள்ளி, கத்தோலிக்க திருச்சபையால் தோற்றுவிக்கப்பட்டு 1912 முதல் 1970-களின் தொடக்கம்வரையில் இயங்கி உள்ளது.[18]
ஏப்ரல் 2019இல் கனடாவின் மானிட்டோபா மாகாணத்தில் உள்ள பிராண்டன் பழங்குடி குழந்தைகள் உறைவிடப்பளளி வளாகத்தை ஆய்வு செய்த போது 3 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 4 சூன் 2021 அன்று இப்பள்ளி வளாகத்தில் 104 புதைகுழிகளில் 78 மட்டுமே பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகள் என அறிவிக்கப்பட்டது.[19][20]
25 சூன் 2021 அன்று கனடாவின் சஸ்காச்சுவான் மாகாணத்தின் மாரிவெல் செவ்விந்தியப் பழங்குடிகள் உறைவிடப்பள்ளி வளாகத்தை ஆய்வு செய்த போது, 751 பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டது.[21][22][22][23][24][24][25]
கனடா நாட்டு மகக்ள் பழங்குடியின குழந்தைகள் இறப்பிறகு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.[26] கனடா நாட்டின் பிரதம அமைச்சர் ஜஸ்டின் துரூடோ பழங்குடியின குழந்தைகளின் மரணத்திற்கு காரணமான கத்தோலிக்க திருச்சபைகள் நடத்திய உறைவிடப் பள்ளிகள் சார்பாக கத்தோலிக்க சமயத் தலைவர் போப்பாண்டவர், கனடா நாட்டு பழங்குடி தலைவர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.[27][28] கனடாவில் நடைபெற்ற பூர்வ குடி குழந்தைகளின் படுகொலைகளுக்கு எதிராக ஆத்திரேலியாவில் வாழும் பூர்வ குடிகள் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளனர்.[29] கனடா பூர்வகுடி உறைவிடப் பள்ளிக் குழந்தைகளின் மரணங்களுக்கு கனடா நாட்டின் கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்கள் மன்னிப்பு தெரிவித்தனர்.[30]
போப் பிரான்சிஸ் 26 ஜூலை 2022 அன்று கனடாவின் பூர்வீக பழங்குடி சமூகங்களிடம், கத்தோலிக்கத் திருச்சபையினர் நடத்திய உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படித்த பழங்குடி குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதற்காக மன்னிப்பு கேட்டார். போப்பாண்டவர் இதற்காக மன்னிப்புக் கோரியது இது இரண்டாவது முறையாகும்.[31]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.