திருவிவிலிய நூல் From Wikipedia, the free encyclopedia
1 அரசர்கள் (1 Kings) / 1 இராஜாக்கள் என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும். இதன் பின்னே வருகின்ற 2 அரசர்கள் என்னும் நூல் யூதா-இசுரயேல் நாடுகளின் வரலாற்றைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது.
"1 & 2 சாமுவேல்" என்னும் நூல்களில் இசுரயேல் அரசுரிமையின் தொடக்க வரலாறு காணப்படுகிறது. 1 & 2 அரசர்கள் என்னும் இந்நூல்கள் அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளன. மூல மொழியாகிய எபிரேயத்தில் இந்நூல்கள் "Sefer melakhim" (= அரசர்கள் பற்றிய நூல்கள்) என அறியப்படுகின்றன. கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு. 6ஆம் நூற்றாண்டு வரை[1][2] யூதா-இசுரயேல் நாடுகளில் நிகழ்ந்தவற்றை, குறிப்பாக அவற்றை ஆண்ட அரசர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பதால் இந்நூல்கள் இப்பெயர் பெற்றன.
1 அரசர்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது:
1) இஸ்ரயேல் மக்களினம் முழுவதன் மேலும் சாலமோன் அரசுரிமை பெறுதல்; அவர் தந்தை தாவீது இறத்தல்.
2) சாலமோனின் ஆட்சியும் மாட்சியும்; எருசலேமில் அவர் எழுப்பிய கோவிலின் சிறப்பு.
3) நாடு தெற்கு வடக்கு என்ற இரண்டு அரசுகளாகப் பிரிதல்; அவற்றைக் கி.மு. 850 வரை ஆண்ட அரசர்களின் வரலாறு.
இவ்விரு நூல்களிலும், ஒவ்வொரு அரசனும், ஆண்டவருக்கு, அவன் காட்டிய பற்றுறுதிக்கேற்ப, தீர்ப்பு வழங்கப்படுகிறான்; ஆண்டவரிடம் காட்டும் பற்றுறுதி, நாட்டுக்கு வெற்றியைத் தருகின்றது; மாறாக, வேற்றுத் தெய்வ வழிபாடும், கீழ்ப்படியாமையும், அழிவையே கொணர்கின்றன. இந்த அளவுகோலின்படி, வடநாட்டு (இசுரயேல்) அரசர்கள் எல்லாருமே தீயவழியில் நடந்தார்கள் என்றும், தென்னாட்டு (யூதா) அரசர்களில் சிலரும், அவ்வாறு நடந்தார்கள் என்றும் காட்டப்படுகிறது.
பல இறைவாக்கினர் சிலைவழிபாட்டினின்றும் ஆண்டவருக்குக் கீழ்ப்படியாமையினின்றும் மக்களைத் தடுத்து நிறுத்தினர். அவர்களுள் எலியா தலைசிறந்தவராக, இந்நூலில் காட்டப்படுகின்றார்.
பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. தாவீது அரசரின் இறுதி நாள்கள் | 1:1 - 2:12 | 508 - 512 |
2. சாலமோன் அரசராதல் | 2:13 - 46 | 512 - 514 |
3. சாலமோனின் ஆட்சி
அ) ஆட்சியின் முற்பகுதி
|
3:1 - 11:43
3:1 - 4:34
|
514 - 534
514 - 517
|
4. பிளவுபட்ட நாடு
அ) வடகுலங்களின் கிளர்ச்சி
|
12:1 - 22:53
12:1 - 14:20
|
535 - 559
535 - 540
|
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.