From Wikipedia, the free encyclopedia
ஹியூஸ்டன் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும். இந்நகரம் தென்கிழக்கு டெக்சாஸ் மாகாணத்தில் மெக்ஸிகோ வளைகுடாவிற்கு அருகில் அமைந்துள்ளது. 2014 ஆம் வருட கணக்கெடுப்பின் படி 2.239 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் 599.9 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ளது. இது வடஅமெரிக்காவின் ஜனத்தொகை மிகுந்த பெருநகர வரிசையில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
ஹியூஸ்டன் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): விண்வெளி நகரம், எச்-டவுன் (H-Town) | |
நாடு | அமெரிக்கா |
மாநிலம் | டெக்சாஸ் |
மாவட்டங்கள் | ஹாரிஸ், ஃபோர்ட் பெண்ட், மொன்ட்கமரி |
Incorporated | ஜூன் 5, 1837 |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | அனிஷ் டி. பார்க்கர் |
பரப்பளவு | |
• மாநகரம் | 1,558 km2 (601.7 sq mi) |
• நிலம் | 1,501 km2 (579.4 sq mi) |
• நீர் | 57.7 km2 (22.3 sq mi) |
ஏற்றம் | 13 m (43 ft) |
மக்கள்தொகை | |
• மாநகரம் | 21,44,491 (4ம்) |
• அடர்த்தி | 1,429/km2 (3,701/sq mi) |
• நகர்ப்புறம் | 38,22,509 |
• பெருநகர் | 55,39,949 |
• Demonym | Houstonian |
நேர வலயம் | ஒசநே-6 (CST) |
• கோடை (பசேநே) | ஒசநே-5 (CDT) |
FIPS | 48-35000[3] |
GNIS feature ID | 1380948[4] |
இணையதளம் | www.houstontx.gov |
ஹூஸ்டன் நகரம் ஆகஸ்ட் 28, 1836 ஆம் தேதி Buffalo Bayou நதிக்கிளையில் கண்டறியப்பட்டு ஜூன் 5, 1837 இல் நகரமாக உருவாக்கப்பட்டது. இந்நகரம் முன்னாள் படைத்தளபதியும், குடியரசு டெக்சாஸ் பகுதியின் முன்னாள் தலைவரும், Battle of San Jacinto போரை வழிநடத்தி வெற்றி கண்டவருமான Sam Houston நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.