Remove ads
From Wikipedia, the free encyclopedia
ராவ் பகதூர் ஹுபட்டாலே பெல்லி அரி கௌடர் (டிசம்பர் 4, 1893 - சூன் 28, 1971), படுகர் சமூகத்தின் முதல் அரசியல் தலைவரும், அச்சமூகத்தின் முதல் சென்னை மாகாண சட்டமன்றத்தலைவரும் ஆவார்.
ஹுபடாலெ பெல்லி அரி கௌடர் (1893-1971) | |
---|---|
சென்னை மாகாண அவை உறுப்பினர் | |
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1923–1926 | |
சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1930–1934 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | டிசம்பர் 4, 1893 ஹுபட்டாலெ, சென்னை மாகாணம் |
இறப்பு | சூன் 28, 1971 78) | (அகவை
தேசியம் | இந்தியர் |
துணைவர் | கௌரி(ஜக்கதா) |
முன்னாள் கல்லூரி | சென்னை கிறித்தவ கல்லூரி |
அரி கெளடர், 1893 ஆம் ஆண்டு, நீலகிரி மாவட்டத்தின் அருவங்காடு அருகிலுள்ள ஹுபத்தாலே கிராமத்தில் ராவ்பகதூர் பெல்லி கெளடருக்கும், நஞ்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார்.[1] இவர்தம் சகோதரி இதயம்மாள் பெ. கெளடர் ஆவார். ராவ்பகதூர் பெல்லி கௌடர் நீலகிரி விரைவு வண்டியை வடிவமைத்த பொறியாளர் ஆவார். சென்னைப் பல்கலையின் சென்னைக் கிறித்தவ கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். பின்னர் இந்திய அரசியலில் ஈடுபடலானர்.
1941லிருந்து 1971வரை நீலகிரி மாவட்டத்தின் மேட்டுப்பாளையத்தில் கூட்டுறவு சங்கத்தை (NCMS - Nilgiris Cooperative Marketing Society) நிறுவி, அங்குள்ள உழவர்கள், வணிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய பெருமை இவரையே சாறும். இதன் மூலம், விவசாயிகள் பண்ணைப் பொருட்களுக்கு நியாயவிலையும் இடைத்தரகர்களின் சுரண்டல்களிருந்தும் காக்கப்பட்டனர்.
கௌடர் இன மக்களின் குலபதியாகவும், முன்னுதாரணமாகவும் திகழ்ந்த ஆர்ய கௌடர் சூன் 28, 1971ல் காலமானர்.[5] இவரின் அருந்தொண்டினை நினைவு கூர்ந்து 1939ல் மைசூர் சமஸ்தானத்தையும், சென்னை மாகாணத்தையும் இணைக்கும் மாசினன்குடியில் உள்ள பாலத்திற்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.
இவரது நினைவாக சென்னை மாம்பலத்தில் உள்ள சாலை ஆர்யகௌடா சாலையென வழங்கப்பெறுகிறது. மாம்பல ரயில் நிலையத்திற்கு இவர் அருளிய நிலக் கொடையால் இப்பெயரிடப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.