இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர் From Wikipedia, the free encyclopedia
சிரேயா கோசல் அல்லது சிரேயா கோஷல் (வங்காள மொழி: শ্রেয়া ঘোষাল; born 12 March 1984) ஓர் இந்தியப் பாடகி. பல மொழித் திரைப்படங்களில் பின்னணிப் பாடல்கள் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் தேவ்தாஸ் இந்தி படம் மூலம் 2002ஆம் ஆண்டு திரைப்பட உலகுக்கு அறிமுகமானார்.
சிரேயா கோசல் | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சிரேயா கோஷல் |
பிறப்பு | 12 மார்ச்சு 1984 |
பிறப்பிடம் | பகரம்பூர், மேற்கு வங்காளம், இந்தியா |
இசை வடிவங்கள் | கசல், திரைப்படங்கள், இந்துஸ்தானி |
தொழில்(கள்) | பாடகி |
இசைக்கருவி(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 2002–தற்காலம் |
வெளியீட்டு நிறுவனங்கள் | சகரிகா |
இணையதளம் | shreyaghoshal.com |
"நினைத்து நினைத்து பார்த்தால்" | ||||
---|---|---|---|---|
பாட்டு by யுவன் சங்கர் ராஜா from the album 7ஜி ரெயின்போ காலனி | ||||
வெளியீடு | 2004 | |||
பதிவு | சென்னை, இந்தியா | |||
வகை | திரைப் பாடல் | |||
எழுதியவர் | நா. முத்துக்குமார் | |||
7ஜி ரெயின்போ காலனி track listing | ||||
|
நினைத்து நினைத்துப் பார்த்தால் என்று தொடங்கும் திரைப் பாடல், செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் அமைய இருந்த சோகப்பாடல் ஆகும். நா. முத்துக்குமார் எழுதி யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடலை சிரேயா கோசல் பாடியுள்ளார்.
திரைப்படத்தில் பெண் குரலில் பாடும் பாடல் இடம்பெறவில்லை. சில வரிகள் மாற்றத்துடன் ஆண் குரலில் பாடப்பட்ட பாடல் மட்டும் திரைப்படத்தில் அமைந்துள்ளது.[16] பெண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் ஆண் குரலில் இடம்பெறும் பாடலின் வரிகளுக்கும் பெரிதான வித்தியாசம் தெரியாவண்ணமிருக்கும்; ஆனால் கூர்ந்து கவனித்தால் அதிலிருக்கும் முரணும் அழகும் தெரியவரும்.
அமேசான் தளத்தில் வெளியிடப்பட்ட பிரபலமான பாடல்கள்[17] வரிசையில் இப்பாடலும்[18] இடம்பெற்றுள்ளது.
இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக யுவன் சங்கர் ராஜாவுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. மற்ற பாடல்களை விட இப்பாடலே அதிகமாக பிரபலமானது சுமாராக 15969 முறை கேட்கப்பட்டுள்ளது.[19] ஐஎம்டிபி தளத்தில் இத்திரைப்படப் பாடல்கள் வரிசைப்படுத்தியதில் இப்பாடல் முதலிடத்தில் உள்ளது.[20] யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் தளத்தில் இப்பாடலுக்கு முதலிடம் கொடுத்துள்ளனர்.[21] இப்பாடல் சிறந்த பாடகியாக ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[22] 2004-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப் பாடலுக்கு, 2006-ம் ஆண்டு வரை வெளிவந்த வலைத்தளங்களிலும் இப்பாடல் பற்றி நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.[23]
ஆண் குரல் | பெண் குரல் |
---|---|
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன் |
நினைத்து நினைத்து பார்த்தால்
நெருங்கி அருகில் வருவேன் |
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன் |
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன் |
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே |
எடுத்துப் படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் உனக்குக் கண்ணே |
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன் |
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னைப் பார்க்கிறேன் |
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படிச் சொல்வேன் |
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
நமது கதையை காலமும் சொல்லும் |
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படிச் சொல்வேன் |
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும் |
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே? |
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் உந்தன் கையில் |
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே |
தோளில் சாய்ந்து கதைகள் பேச
நமது விதியில் இல்லை |
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே |
முதல் கனவு போதுமே காதலா
கண்கள் திறந்திடு |
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும் |
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
உனது பேச்சில் கலந்தே இருக்கும் |
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும் |
பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் உன்னுடன் இருக்கும் |
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும் |
தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்
வந்து வந்து போகும் |
திருட்டுப் போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும் |
திருட்டுப் போன தடயம் இருந்தும்
திரும்பி வருவேன் நானும் |
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் |
ஒரு தருணம் என்னடா காதலா
உன்னுள் வாழ்கிறேன் |
இப்பாடலின் முதல் வரியை, நினைத்து நினைத்துப் பார்த்தேன்[24][25] என்ற திரைப்படத்தின் பெயராக இயக்குநர் மணிகண்டனால் வைக்கப்பட்டது.
Seamless Wikipedia browsing. On steroids.