From Wikipedia, the free encyclopedia
வேளாண்மை அறிவியல் (Agricultural science) என்பது உயிரியலின் அகல்விரிவான பலதுறை சார்ந்த அறிவி'யல் புலமாகும். வேளாண்மையைப் புரிந்துகொள்ளவும் நடைமுறையில் பின்பற்றவும் இயற்கை அறிவியலும் பொருளியலும் சமூக அறிவியலும் சார்ந்த பலதுறை அறிவு வேண்டப்ப்படுகிறது. கால்நடை அறிவியல் மட்டும் இதுறையின் வரையறைக்குளபடங்காது.
இந்த மூன்றுமே வெவ்வேறு கருப்பொருள்களைக் கொண்டவை என்றாலும் இவை அடிக்கடி குழம்பிக்கொள்ளப் படுவதும் உண்டு:
வேளாண்மை அறிவியலில் பின்வரும் புலங்களுக்கான ஆராய்ச்சியும் உருவாக்கமும் மேற்கொள்ளப்படுகிறது:[1][2] தாவர இனவளர்ப்பும் மரபியலும்
வேளாண்ம உயீரித் தொழில்நுட்பம் என்பது தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிரிகள் ஆகிய உயிரிகளை மாற்ற, அறிவியல் கருவிகளையும் நுட்பங்களையும் பயன்படுத்தும் சிறப்பு வேளாண்மைப் புலமாகும். இதற்கு மரபன் பொறியியல், மூலக்கூற்றுக் குறிப்பான்கள், பாலூசிகள், திசு வளர்ப்பு ஆகிய நுட்பங்கள் பயன்கொள்ளப்படுகின்றன.[3]
மண் ஒட்டுமொத்தக் கரிமப் பொருள் வளத்தை மீட்க எடுக்கும் பெயர்நிலையின் போது, உரத்தைச் சற்றே கூடுதலாகப் பயன்படுத்தாவிட்டால் விளைச்சல் குறையும். இந்த விளைச்சல் குறைவுக்குக் காரணம் பயிரிட்ட பின் நிலவும் மண் எசத்தில் இருந்து பயிர் தனக்கு வேண்டு தழைச்சத்தைப் பெறமுயத நிலைமையே ஆகும். இப்பெயர் நிலைக் காலம் சில மாதங்களில் இருந்து பல்லாண்டுகள் வரைகூட நீடிக்கலாம். இது களச் சுற்றுச்சூழலைப் பொறுத்தும் பயிரின் கரிமப் பொருளில் அமையும் கரிமத் தனிமத்துக்கும் காலகத் தனிமத்துக்கும் இடையில் உள்ல விகிதத்தைப் பொறுத்தும் அமையும்.
பதினெட்டாம் நூற்றாண்டில் யோகான் பிரெடரிக் மேயர் எனும் வேளான்மை அறிஞர் துத்தநாக நீரேற்ற கால்சியச் சல்பேட்டை உரமாகப் பயன்படுத்துவது சார்ந்த செய்முறைகளைச் செய்து பார்த்தார்.[4]
ஜான் இலாவேசும் ஜோசப் என்றி கில்பர்ட்டும் 1843 இல் நீண்ட காலக் களச் செய்முறைகளை இங்கிலாந்தில் அமைந்த உரோதாசுடெடு ஆராய்ச்சி நிலையத்தில் செய்யத் தொடங்கினர். இவற்றில் சில செய்முறைகள் இன்னமும் கூடத் தொடர்கின்றன.[5]
ஐக்கிய அமெரிக்காவில், 1887 ஆம் ஆண்டைய ஏட்சு சட்டத்திற்குப் பிறகு வேளாண்மையில் ஓர் அறிவியல் புரட்சி தோன்றியது. இச்சட்டத்தில் வேளாண்மை அறிவியல் எனும் சொல் ஆளப்பட்டது. இச்சட்டம் உழவர்களின் செயற்கை உரங்களின் உள்ளியைபுகளை அறியும் ஆர்வத்தால் விளைந்தது. ஆனால் 1917 ஆம் ஆண்டைய சுமித்-அகுசு சட்டம் வேளாண்மைச் சட்டம் வேளண்மைக் கல்வியை முதைய மரபான முறைகளுக்கே மாற்றியது. என்றாலும் அறிவியல்முறையிலான வேளண்மைக் கல்வி கட்டமைக்கப்பட்டு விட்டது.[6] அமெரிக்காவில் 1906 ஆண்டுக்குப் பிறகு, 44 ஆண்டுகலுக்குத் தனியார் முத்லீட்டைவிட பொது அரசு முதலீடு வேளாண்மை ஆராய்ச்சிக்கு ஒதுக்கபட்டு வந்தது.[7]:xxi
வளரும் நாடுகளில் 1960 களுக்குப் பின்னரே பசுமைப் புரட்சி எனப்பட்ட செறிநிலை வேளாண்மை உருவாக்கப்பட்டது; இது உயர்விளைச்சலுக்காக பயிர்களையும் விலங்குகளையும் தேர்ந்தெடுத்து வளர்ப்பதில் ஏற்பட்ட முன்னேற்றங்களோடும் செயற்கை உரங்களையும்தீங்குயிர்கொல்லிகளைக் கூடுதலாகப் பயன்படுத்துவதோடும் நெருக்கமான உறவு பூண்டிருந்தது.
இயற்கையை இடைமறித்த மிகப் பழழையதும் பேரளவிலானதுமான வேளாண்மைத் தொழில் இருப்பதால், வேளாண்மை சுற்றுச்சூழலைப் பெரிதும் தாக்கமுறச் செய்துள்ளது. குறிப்பாக அண்மைக் கால செறிநிலை வேளாண்மையும் பொதுவான தொழில் வளர்ச்சியும் மக்கள்தொகை வளர்ச்சியும் வேளாண்மை அறிஞரிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இந்நிலை பல புதிய அறிவியல் புலங்கள் தோன்ற காரணமாகிவிட்டது. இவற்றில் ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை, கழிவு மேலாண்மை, நிலக் கிடப்பியல், மரபன்தொகையியல், வேளாண்மை மெய்யியல், பொருளியல் விளைபொருளாக அமையாத உணவாக்கத் தொழில் சார்ந்த சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவை உள்ளடங்கும். உண்மையில், சுற்றுச்சூழல் தாக்கத்துக்கும்வேளாண்மை வளர்ச்சிக்கும் இடையிலான ஊடாட்டங்கள் வேளாண்மை அறிவியலை மேலும் ஆழமாக புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயத் தேவையை உருவாக்கியுள்ளது.
உயிரித் தொழில்நுட்பம், கணினி அறிவியல், தகவல் கையாளலும் தேக்குதலும் போன்ற புதிய தொழிநுட்பங்களும் இக்காலத் தொழிநுட்ப முன்னேற்றங்களும் மரபணுப் பொறியியல், வேளாண் இயற்பியல், மேனிலைப் புள்ளியியல் துல்லியமான வேளாண்மை போன்ற புதிய ஆராய்ச்சிப் புலங்களை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளன . வேளானமையில் மாந்தன் இயற்கை ஊடாட்டம் சார்ந்த இயற்கை, சமூக அறிவியல் புலங்களும் வேளாண்மை வரலாறு, மரபு வேளாண்மை, வேளாண்மை-சமயம் வேளாண் விளைச்சல் அமைப்புகளின் பொருள்சாரா கூறுகள் ஆகியவற்றின் புரிதலை மேம்படுத்தியுள்ளன .
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.