Remove ads
From Wikipedia, the free encyclopedia
வேரா கூப்பர் உரூபின் (Vera (Cooper) Rubin) (பிறப்பு: சூலை 23, 1928 ) ஓர் அமெரிக்க வானியலாளர். இவர் பால்வெளி சுழற்சி வீதம் குறித்த ஆய்வின் முன்னோடியாவார். இவர் பால்வெளிகளின் முன்கணிப்புக் கோண இயக்கத்துக்கும் நோக்கீட்டுக் கோணையக்கத்துக்கும் இடையில் நிலவும் மதிப்பு வேறுபாட்டைப் பால்வெளிச் சுழற்சி வரைவுகளில் இருந்து கண்டறிந்தார். இந்நிகழ்வு பால்வெளி சுழற்சி சிக்கல் வழங்கப்படுகிறது
வேரா உரூபின் | |
---|---|
வேரா உரூபின் கதிர்நிரல்களை அளத்தல், அண். 1970 | |
பிறப்பு | சூலை 23, 1928 பிலடெல்பியா, பென்னிசில்வேனியா, அமெரிக்க ஒன்றிய நாடுகள் |
குடியுரிமை | அமெரிக்கக் குடிமகள் |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | Georgetown University, Carnegie Institution of Washington |
கல்வி கற்ற இடங்கள் | வாசர் கல்லூரி, கார்னல் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | (1954) |
ஆய்வு நெறியாளர் | ஜார்ஜ் காமோவ் |
ஏனைய கற்கை ஆலோசகர்கள் | Richard Feynman, Hans Bethe, Philip Morrison |
குறிப்பிடத்தக்க மாணவர்கள் | சாந்திரா ஃபேபர் |
அறியப்படுவது | பால்வெளி சுழற்சி சிக்கல் கரும்பொருண்மம் உரூபின் – ஃபோர்டு விளைவு |
விருதுகள் | புரூசு பதக்கம், அறிவியலுக்கான டிக்சன் பரிசு, அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம், அறிவியலுக்கான தேசியப் பதக்கம் |
இவர் 2013 செப்டம்பர் 6 வரையில் 114 ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட்டுள்ளார். இவர் 2002 முதல் 2008 வரை அறிவியல் தொண்டு அறக்கட்டளையாளர் குழுமத்தில் ப்ணியாற்றியுள்ளார். இன்று இந்நிறுவனம் அறிவியலும் பொதுமக்களும்சார் கழகம் எனப்படுகிறது.
இவரொரு யூதர் என்பதால் அறிவியலுக்கும் சமயத்துக்கும் இடையே முரண்பாடேதும் காண்பதில்லை. ஒரு நேர்காணலில் இவர் கூறுகிறார்: " என்வாழ்வில் அறிவியலும் சமயமும் தனியானவை. நான் ஒரு யூதர். எனவெ சமயம் எனக்கு ஓர் அறநெறித் தொகுப்பு;ஒருவகையான வரலாறு. நன் அறநெறிப்படி அறிவியல் பணியாற்றுகிறேன். கருத்தளவில் அறிவியலை இப்புடவியில் நம் வாழ்வைப் புரிந்துகொள்ளும் வழிமுறையாகவே நான் நம்புகிறேன்."[16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.