From Wikipedia, the free encyclopedia
வார்ப்புரு:Taxobox/virus taxonomy
Avian orthoavulavirus 1 | |
---|---|
Avian orthoavulavirus 1 (stained in brown) in the இமையிணைப்படலம் of a chicken | |
தீநுண்ம வகைப்பாடு | |
இனம்: | Avian orthoavulavirus 1 |
வெள்ளைக்கழிச்சல் அல்லது இராணிக்கெட் ( நியூகேசில் நோய், Newcastle disease) பறவைகளைப் பாதிக்கும் ஒரு நோய். கோழிகள் போன்ற வீட்டுப் பறவைகளைத் தாக்கும் இது ஒரு நச்சுயிரி நோயாகும். இது பறவையின நோய்களிலேயே மிகவும் கொடுமையானது. இதனால் பாதிக்கப்படும் பறவையினங்கள் எந்த ஒரு நோய் அறிகுறிகளையும் வெளிப்படுத்தாமலே இறந்துவிடும்.
இந்த நோய் பறவையின அவுல நச்சுயிரினால் பரவுகிறது. நோய் உண்டாக்கும் திறன் நச்சுயிரின் வகையைச் சார்ந்து மாறும் தன்மைக் கொண்டது.
இவற்றில் லென்டோஜெனிக் மற்றும் மீசோஜெனிக் வகைகள் குறிப்பிட்ட பகுதியில் நோய் பாதிப்புகளை உண்டாக்கும்.
இந்தநோய் தொற்றும் தன்மைகொண்டது. இந்தநோய், நோய்வாய்ப்ட்ட கோழிகளிலிருந்து மற்ற கோழிகளுக்குப் பரவுகின்றது. இந்நோய் கோழி எச்சம் மூலமும், மற்றும் கோழியின் மூக்கு, வாய், கண் மூலம் வெளியாகும் சுரப்பு நீர் வழியாகவும் மற்ற கோழிகளுக்குப் பரவும். பாதிக்கப்பட்ட கோழிகளின் முட்டைகளிலும் இந்தநச்சுயிரி உள்ளதால், இந்த முட்டைகள் குஞ்சு பொரித்தால் நச்சுயிரி வெளியேறி மற்ற கோழிகளைப் பாதிக்கும் .
நோய் அறிகுறிகள் நச்சுயிரின் வகையைச் சார்ந்து மாறும் தன்மை கொண்டன
இந்நோய்க்கு சிகிச்சைமுறை எதுவும் இல்லை .
1) இந்நோயைத் தடுக்க கீழ்க்கண்டவாறு கோழிகளுக்கு தடுப்பூசிகளை அளித்து நோய் வராமல் தடுக்கலாம்.
தடுப்பூசி அட்டவணை
தற்பொழுது வாய்வழியாகவும் வெப்பம் தாங்கக்கூடிய இராணிக்கெட் தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. இதை தீவனத்தில் கலந்து கோழிகளுக்கு கொடுக்கலாம். இது எளிய முறையாகும். இந்தநோய்யை தடுக்க கால்நடைத்துறை மாநிலம் முழுவதும்
2)கோழிகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் போது அவற்றில் இராணிக்கெட் நோய் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும்.
3)இராணிக்கெட் நோய் மற்ற கோழிகளுக்கு வேகமாகப் பரவும் தன்மைக் கொண்டதாகும். எனவே சுவாசநோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.