ஹங்க்பாபா லகோடா மருந்து மனிதர் மற்றும் புனித மனிதர் From Wikipedia, the free encyclopedia
வீற்றிருக்கும் எருது (Sitting Bull, சிட்டிங் புல்) என்பது 19ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடிய புகழ்மிக்க அமெரிக்க-இந்தியத் தலைவரின் பெயர் ஆகும். இவர் சுமார் 1831இல் பிறந்தார். 1890, திசம்பர் 15ஆம் நாள் இறந்தார்.
வீற்றிருக்கும் எருது | |
---|---|
Tȟatȟaŋka Iyotȟaŋka (born Hoka Psice) | |
1882ஆம் ஆண்டில் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | c. 1831[1] கிராண்ட் ஆறு, தெற்கு டகோட்டா |
இறப்பு | கிராண்ட் ஆறு, தெற்கு டகோட்டா, Standing Rock Indian Reservation | திசம்பர் 15, 1890 (aged 59)
காரணம் of death | சுட்டுக்கொல்லப்பட்டார் |
இளைப்பாறுமிடம் | தெற்கு டகோட்டா |
துணைவர்(கள்) | வெளிர் முடி Four Robes Snow-on-Her Seen-by-her-Nation சிவப்பு பெண் |
உறவுகள் | எகாக்கா கிளெசுக்கா (half brother) வெள்ளை எருது (nephew) |
பிள்ளைகள் | ஒற்றை எருது (தத்து எடுக்கப்பட்ட மகன்) காக்கை பாதம் (மகன்) Many Horses (daughter) Walks Looking (மகள்) (தத்து எடுக்கப்பட்ட மகள்) |
பெற்றோர் | குதிக்கும் எருது (தந்தை) Her-Holy-Door (mother) |
அறியப்படுவது | Battle of Little Big Horn, resistance to USA |
சமயம் | இலகோடா, உரோமன் கத்தோலிக்கம் |
கையெழுத்து | |
"வீற்றிருக்கும் எருது" என்னும் பெயர் அமெரிக்க-இந்திய மொழியாகிய லக்கோட்டாவில் Tȟatȟáŋka Íyotake என்று எழுதப்படும்.[2] அவருக்கு Slon-he ("மெதுவாகச் செல்பவர்") என்றொரு பட்டப்பெயரும் இருந்தது. அவர் அமெரிக்க-இந்திய இனமாகிய லக்கோட்டா சீயூ குலத்தின் கங்க்பாப்பா பிரிவைச் சார்ந்த சமய-அரசியல் பெருந்தலைவராகத் திகழ்ந்தார்.
வீற்றிருக்கும் எருது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் டக்கோட்டா மாகாணத்தில் பேராறு என்றழைக்கப்படும் பகுதியில் பிறந்தார். அவர் ஐக்கிய அமெரிக்க கொள்கைகளை எதிர்த்த "ஆவி நடனம்" (Ghost Dance) என்ற இயக்கத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடும் என்று பயந்து, அவரைக் கைதுசெய்யப் போனவிடத்தில், "அமெரிக்க-இந்திய காவல் துறை"யினர் அவரை "நிலைக்கல் இந்தியக் காப்பிடம்" என்னும் பகுதியில் சுட்டுக் கொன்றனர்.
வீற்றிருக்கும் எருது டகோடா எல்லைக்குள் பிறந்தவராவார்.[3][4] 2007இல் வீற்றிருக்கும் எருதுவின் பெயரன் அவர்களின் குடும்பத்தில் செவிவழிச்செய்தியாக வீற்றிருக்கும் எருது யெல்லோ ஸ்டோன் ஆறுக்கருகே பிறந்தார் என்றார்.[5] He was named Jumping Badger at birth.[6] இவரின் குல மரபுப்படி இவரின் தந்தையின் பெயர்களுல் ஒன்றான வீற்றிருக்கும் எருது என்னும் பொருள்படும் Tȟatȟaŋka Iyotȟaŋka என்னும் பெயர் அளிக்கப்பட்டது.
1862ஆம் ஆண்டு நடைபெற்ற டகோடா போரில் இவரின் குலத்தினர் பங்கேற்கவில்லை. ஆயினும் இப்போரில் கிழக்கு டகோடாவில் இருந்த பல பழங்குடியினர்களும் மைய தெற்கு மினசோட்டாவில் இருந்த போர்வீரர்களுமாக மொத்தம் 300 முதல் 800 வரை கொல்லப்பட்டிருக்கலாம். இப்போரானது அரசு பழங்குடியினரை நடத்தும் விதத்திற்கு எதிராகவும் அவ்விடத்தை விட்டு வெள்ளையர்களை ஓட்டும் முயற்சியாகவும் இருந்தது. அமெரிக்க உள்நாட்டுப் போர் மற்றும் ஐக்கிய அமெரிக்கத் தரைப்படையுடனும் போரில் இருந்ததோதும் அமெரிக்க அரசு 1863இலும் 1864இலும் இப்போரில் ஈடுபடா இனக்குழுக்களின் மீதும் கூட அமெரிக்க அரசு பதில் தாக்குதல் நடத்தியது.[7]
1864இல், தலபதி ஆல்ஃபிரட் சுல்லியின் 2200 வீரர்களைக்கொண்ட இரண்டு படை பிரிவுகள் இவரின் கிராமத்தை தாக்கினர். இப்படையினருக்கு எதிராக வீற்றிருக்கும் எருது, கால் மற்றும் இன்காபுதுத்தா ஆகியோர் இருந்தனர். இவர்கள் இப்போரில் தோற்கடிக்கப்படு அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் ஆகஸ்ட் வரை பாடைப்பிரிவினர் அங்கேயே தொடர்ந்தது நிலைகொண்டிருந்தனர். செப்டம்பர் மாதத்தில், வீற்றிருக்கும் எருது 100 அன்குபாபா பழங்குடியினரோடு இப்போது மார்மத், வடக்கு டகோடா அருகே தலபதி ஜேம்ஸ் ஃபிஸ்கை எதிர்கொன்டார். இப்போரின்போது வீற்றிருக்கும் எருது சுடப்பட்டாலும் உயிர்தப்பினார். அவரின் இடுப்பில் குண்டடிப்பட்டது.[8]
1883இல் இவர் கத்தோலிக்கராக திருமுழுக்கு பெற்றார் என செய்திகள் பரவின. ஆயினும் அவ்விடத்தில் இருந்த ஜேம்ஸ் மெக்லாக்லின் என்னும் இந்திய இடைத்தரகர் இதனை வதந்தி மறுத்துள்ளார்.[9][10][11] ஆயினும் 1883க்குப்பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வீற்றிருக்கும் எருது கழுத்தில் கத்தோலிக்க சிலுவையுடன் காட்சியளிக்கின்றார். இயேசுவின் உடலோடு வடிவமைக்கப்பட்டிருக்கும் இத்தகைய சிலுவைகளை கத்தோலிக்கரும் மரபுவழித்திருச்சபையினரும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மேலும் மரபு வழி சபைகள் அமெரிக்காவில் அன்நாட்களில் கால்பதிக்கவில்லை என்பது குறிக்கத்தக்கது.
1890ஆம் ஆண்டு ஜேம்ஸ் மெக்லாகின் லகோடா தலைவரை கைது செய்ய எண்ணினார். பேய் நடனம் இயக்கதினரோடு அவர் சேரப்போகின்றார் என அஞ்சியதே இதற்கு காரணம். முன் கூட்டி செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி டிசம்பர் 15ஆம் நாள் காலை ஐந்து மணியளவில் வீற்றிருக்கும் எருதுவின் வீட்டினை உடைத்து அவரையும் புல்ஹெடையும் கைது செய்தனர்.[12] இதனால் அவர்களின் குழுவினரோடு நடந்த சில நிமிட சண்டையில் 6 காவலாளிகள் உட்பட பலர் இறந்தனர். வீற்றிருக்கும் எருது தலையினும் மார்பிலும் சுடப்பட்டு இறந்தார். மதியம் 12 முதல் 1க்குல் இவர் இறந்திருக்கக்கூடும்.[13] இவரின் உடல் ஃபோர்ட் ஏட்சுவில் இரானுவத்தினரால் அடக்கம் செய்யப்பட்டது[14] 1953இல் இவரின் குடும்பத்தினர் இவரின் உடலை இவரின் பிறந்த ஊரில் அடக்கம் செய்தனர்.[15][16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.