From Wikipedia, the free encyclopedia
வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் (Vira Parakrama Narendra Sinha, 1690 - 1739) கண்டி இராச்சியத்தின் கடைசி சிங்கள அரசன் ஆவார். தந்தை இரண்டாம் விமலதர்மசூரியனின் இறப்பிற்குப் பின்னர் தனது 17வது அகவையில் ஆட்சிக்கு வந்து 32 ஆண்டுகள் கண்டி இராச்சிய மன்னராக இருந்தார்.
வீர பராக்கிரம நரேந்திரசிங்கன் Vira Parakrama Narendra Sinha | |
---|---|
கண்டி அரசன் | |
ஆட்சி | 4 சூன் 1707 – 13 மே 1739 |
முடிசூட்டு விழா | 1707 |
முன்னிருந்தவர் | இரண்டாம் விமலதர்மசூரியன் |
பின்வந்தவர் | ஸ்ரீ விஜய ராஜசிங்கன் |
துணைவர் | மதுரையில் இருந்து இருவர், மற்றும் மாத்தளை மொனராவில திசாவையின் மகள் |
வாரிசு(கள்) | உனம்புவே மற்றும் ஒரு ஆண் |
மரபு | தினஜரா மாளிகை |
தந்தை | இரண்டாம் விமலதர்மசூரியன் |
பிறப்பு | 1690 இலங்கை |
இறப்பு | 13 மே 1739 இலங்கை |
அடக்கம் | இலங்கை |
வீர நரேந்திர சிங்கன் தனது தந்தையைப் போன்றே சமயப் பற்று மிக்கவராக இருந்தார். இலங்கையின் டச்சு ஆட்சியாளர்களுடன் அமைதியைப் பேணி வந்தார். இலக்கியம், மற்றும் சமயத்தில் அதிக ஆர்வம் காட்டினார். தென்னிந்தியாவின் மதுரை நாயக்க குடும்பத்தில் இருந்து இரு பெண்களை மணந்து கொண்டார். இவர்களுக்குப் பிள்ளைகள் எவரும் பிறக்கவில்லை. அத்துடன் மாத்தளையைச் சேர்ந்த பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்த இன்னும் ஒரு பெண்ணையும் மணந்து கொண்டார். அவளுக்குப் பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டது.
நரேந்திர சிங்கனுக்குப் பிள்ளைகள் எவரும் இல்லாததால் அவருக்குப் பின்னர் மனைவியின் சகோதரன் நாயக்க வம்சத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜய ராஜசிங்கன் ஆட்சியேறினார். அதன் பின்னர் கண்டி இராச்சியம் பிரித்தானியரால் 1815 இல் கைப்பற்றப்படும் வரை சிங்களவர்கள் எவரும் ஆட்சியேறவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.