Remove ads
அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மதுரை மாநகர மேனாள் தந்தையும் ஆவார் From Wikipedia, the free encyclopedia
வி. வி. ராஜன் செல்லப்பா ஓர் இந்திய அரசியல்வாதியும், மதுரை மாநகராட்சியின் மேயரும் ஆவார்.[1] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினரான இவர், 1992 இலிருந்து 1998 வரை தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[2]
வி. வி. ராஜன் செல்லப்பா | |
---|---|
மேயர், மதுரை மாநகராட்சி | |
பதவியில் அக்டோபர் 25, 2011 – அக்டோபர் 24, 2026 | |
முன்னையவர் | தேன்மொழி கோபிநாதன் |
பின்னவர் | இந்திராணி பொன்வசந்த் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 16, 1949 மதுரை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
துணைவர் | மகேசுவரி செல்லப்பா |
பிள்ளைகள் | வி. வி. ராஜ் சத்யன் |
வாழிடம்(s) | பசுமலை, மதுரை – 625 004. |
அக்டோபர் 2011 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் பாக்கியநாதனைத் தோற்கடித்து மதுரை மேயரானார்.
2016ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.