From Wikipedia, the free encyclopedia
வில்லை (ஆங்கிலம்: Lens) என்பது உட்கண்ணில் ஒளி ஊடுருவக்கூடிய கண்ணின் பகுதியாகும்.[1][2] விலங்குகள், பறவைகள், பூச்சிகள் போன்ற உயிர்கள் பார்க்கும் பொருள்கள் அனைத்தும் ஒளிக்கதிர்கள் மூலம் வில்லையை ஊடுருவி விழித்திரையில் விழும்போது தான் அவற்றால் அந்தப் பொருளைப் பார்க்க முடிகிறது.
வில்லை | |
---|---|
![]() தொலைவு மற்றும் அண்மை ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி கற்றையை விழித்திரையில் விழச்செய்யும் வில்லை | |
![]() மனிதக் கண் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | lens crystallin |
MeSH | D007908 |
TA98 | A15.2.05.001 |
TA2 | 6798 |
FMA | 58241 |
உடற்கூற்றியல் |
கண் வில்லை இருபுற குவி அமைப்பை கொண்டது. தொலைவு மற்றும் அண்மை ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி கற்றையை விழித்திரையில் விழச்செய்யும் கண்ணின் பகுதி வில்லை ஆகும். அதற்கேற்றாற்போல் தானியங்கியாக கண் வில்லை தன் குவி அமைப்பை மாற்றிக்கொள்ளும். இது கண்ணின்றன்னமைவு என அழைக்கப்படும். வில்லையில் பல அடுக்குகள் உள்ளன. அதைச் சுற்றியுள்ள உறை மெல்லியதாகவும் ஊடுருவும் தன்மை கொண்டும் ஒளிமிக்கதாகவும் இருக்கும்.
வில்லையின் முதல் அடுக்கு, புறணி என்பதாகும். அதற்குள் முதிர்ந்த உட்கரு இருக்கும் பகுதியாகும். அடுத்த அடு்க்கு முதிரா உட்கரு, அடுத்து உள்ளது திரு உட்கரு எனப்படுகிறது. இதனுள் மட்டமான நிலையிலும் குவிந்த நிலையிலும் (Plano Convex) இரண்டு அங்கங்கள் காணப்படுகின்றன. இறுதியாக வில்லையின் மையத்தில் கரு உட்கரு காணப்படுகிறது. இது வில்லையின் மிகப் பழம் பெரும் பகுதி.
வயது முதிரும்போது, வில்லையைச் சுற்றியுள்ள இழைகள், வில்லையின் மையப்பகுதியை அழுத்துகின்றன. இத்துடன் நீரிழப்பும் ஏற்படுவதால் அது கடினமடைகிறது. இதனால் மைய உட்கரு புறணியை விட திட்பமடைகிறது. புறணி படிப்படியாகக் குறைந்து, முழு வில்லையும் பாதிக்கப்பட்டு கண்புரை உண்டாகிறது.
கண்புறை பல வகைப்படும். அவை வளர்ச்சிப் புறை, நலிவுப்பறை, காயப்பட்ட புறை, கதிர்வீச்சுப் புறை, சிக்கலுடை புறை. உடலின் மற்ற நோய்களுடன் இணைந்த புறை அறுவை முறை மூலம் வில்லையை அகற்றி விடுதலேயாகும். சில வேளைகளில் வில்லை பிசகிவிடுகிறது. அதனால், ஓரளவாகவோ, முழுமையாகவோ இடம் பெயர்ந்து பார்வைக் குறைவு, தக அமைவு பாதிப்பு, இரட்டைப் பார்வை, கருவிழிப் படலத்தில் நடுக்கம் ஆகியவை உண்டாகின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.