வில்லியம் கேலின் (வில்லியம் "பில்" சி. கேலின் இளையவர், William "Bill" G. Kaelin Jr; பிறப்பு: 1957) சான் ஆப்கின்சன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். முன்னர் ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் தேனா-ஃபார்பர் புற்றுநோய்க் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். பீட்டர் இராட்கிளிஃபு, கிரெகு செமென்சா ஆகியோருடன் இவர் 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை வென்றார். அடிப்படை மருத்துவ ஆய்வுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான இலசுக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பெற்றது. 2016 ஆம் ஆண்டுக்கான ஏ.எசு.சி.ஓ புற்றுநோயியல் அறிவியற் பரிசு பெற்றார். 2016 ஆண்டுக்கான் ஏ.ஏ.சி.ஆர் இளவரசி தக்கமாத்ஃசு பரிசு (AACR Princess Takamatsu Award) பெற்றார்.[2][3] இவருடைய ஆய்வு புற்றுநோய் போன்ற கட்டிகளைக் குறைக்கும் புரதப்பொருள்களைப் பற்றி ஆய்வு செய்கின்றார்.

விரைவான உண்மைகள் வில்லியம் கேலின்William Kaelin Jr., பிறப்பு ...
வில்லியம் கேலின்
William Kaelin Jr.
Thumb
பிறப்புநவம்பர் 23, 1957 (1957-11-23) (அகவை 66)
நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைஅமெரிக்கர்
துறைபுற்றுநோயியல்
பணியிடங்கள்
கல்விடியூக் பல்கலைக்கழகம்
விருதுகள்
துணைவர்கரொலைன் கேலின்
மூடு

கேலின் தியூக்கு பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் கணிதமும் வேதியியலும் படித்தார். அங்கேயே இருந்து மருத்துவ முதுகலைப் பட்டமான MD பட்டமும் 1982 இல் பெற்றார். அவர் சான் ஆப்கின்சன் பல்க்லைகழகத்தில் அகநிலைப் பயிற்சியும், தேனா-ஃபார்பர்புற்றுநோய்க்கழகத்தில் புற்றுநோய் பற்றிய ஆய்வு செய்ய சிறப்புப்பேராளராகவும் இருந்தார்.

இவர் மார்பகப் புற்றுநோய் அறுவை மருத்துவர் கரோலின் கேலின் என்பாரை 1988 இல் மணந்தார். மருத்துவர் கரோலின் கேலில் 2015 இல புற்றுநோயால் இறந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[4]

விருதுகள்

  • என்.ஐ.எச் மருத்துவர்-அறிவியலாளர் விருது (1990)[3]
  • ஜேம்ஸ் எஸ். மெக்டொனால்டு அறிஞர் விருது (1993)
  • பால் மார்க்ஸ் பரிசு, ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் (2001)
  • ரிச்சர்டு மற்றும் ஹிண்டா ரொசந்தல் அறக்கட்டளை விருது, ஏஏசிஆர் (2006)
  • டோரீஸ் டியூக் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வாளர் விருது (2006)
  • டியூக் பல்கலைக்கழக மருத்துவத் துறை புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருது (2007)
  • நேசனல் அகாதெமி ஆப் மெடிசினின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் (2007)
  • ஏஐசிஆர் கொலின் தாமஸ் பதக்கம் (2008)
  • கனடா கெய்டுனர் சர்வதேச விருது (2010)[5]
  • நேசனல் அகாதெமி ஆப் சைன்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் (2010)
  • மரபியல் புற்றுநோய் பிரிவில் ஆல்பிரட் குண்ட்சன் விருது, என்சிஐ (2011)
  • ஸ்டான்லி ஜெ. கொர்ஸ்மெர் விருது (2012)
  • தி லிபோலுன் டிலலண்டே அறக்கட்டளையின் தி சயிண்டிபிக் கிராண்ட் பிரைஸ் (2012)[6]
  • உயிரிமருத்துவ அறிவியல் பிரிவில் வில்லி பரிசு (2014)
  • ஏஏசிஆர் அகாதெமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் (2014)
  • ஸ்டீவன் சி. பீரிங் விருது (2014)[7]
  • புற்றுநோய் அறிவியல் விருது, ஏ.எஸ்.சி.ஓ (2016)
  • ஏஏசிஆரின் இளவரசி தகமட்சு விருது (2016)
  • அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கு ஆர்பிரட் லஸ்கர் விருது (2016)
  • மாசுரீ பரிசு (2018)
  • மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2019)

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.