From Wikipedia, the free encyclopedia
வில்லியம் ஆடம்சு (William Adams, 24 செப்டம்பர் 1564 – 16 மே 1620) என்பவர் ஆங்கிலேயக் கப்பலோட்டி ஆவார். 1600 ஆம் ஆண்டில் சப்பானைச் சென்றடைந்த முதலாவது ஆங்கிலேயர் இவராவார். 1598 இல் சப்பானுக்கு சென்ற ஐந்து டச்சுக் கிழக்கிந்திய நிறுவனக் கப்பல்களில் தப்பிப் பிழைத்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆடம்சு சப்பானிலேயே தங்கியிருந்து முதலாவது மேற்கத்தைய சாமுராய் என்ற பெருமையைப் பெற்றார்.
வில்லியம் ஆடம்சு இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில் உள்ள சில்லிங்காம் என்ற சிற்றூரில் பிறந்தவர். சில்லிங்காமில் உள்ள தூய மரிய மதலேனாள் ஆலயத்தில் 24 செப்டம்பர் 1564 அன்று திருமுழுக்கு பெற்ற இவரது திருமுழுக்குப் பதிவே இவர் மெட்வேயில் பிறந்தார் என்பதற்கு உள்ள ஒரே சான்று.[1]
வில்லியம் ஆடம்சுக்கு தோமாசு என்ற ஒரு சகோதரர் இருந்தார். அவர் மகு மற்றும் டி கார்டசு போன்ற கப்பல்களில் பணியாற்றி, வட அமெரிக்க பசிபிக் பெருங்கடலில் இறந்தார்.[2]
வில்லியம் ஆடம்சின் தந்தை ஜான் இறந்தபின், தனது 12 வது வயதில் தேம்சு நதிக்கரையில் உள்ள லைம்கவுசு என்ற இடத்தில் நிக்கோலாசு டிக்கினசு என்பவரின் கப்பல் கட்டுமானத் தளத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்து, தன் 24 வயது வரை இங்கு பணியாற்றினார்.
வில்லியம் ஆடம்சு, ஆகத்து 1589 இல் மேரி கைன் என்பவரை ஃடெபினி ஆலயத்தில் வைத்து திருமணம் செய்தார். இவர்களுக்கு டெலிவரன்சு என்ற மகளும், ஒரு மகனும் என இரு குழந்தைகள் இருந்தனர்.
ஆடம்சுக்கு ஓயுக்கி என்று ஒரு சப்பானிய மனைவியும் இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.