From Wikipedia, the free encyclopedia
வினோத் மேத்தா (Vinod Mehta, 1941 - 2015 மார்ச் 8)[2] ஒரு இந்தியப் பத்திரிகையாளர் ஆவார். இவர் 1995 இலிருந்து 2012 வரை அவுட்லுக் பத்திரிக்கையின் நிறுவனராகவும் ஆசிரியராகவும் இருந்தார். இவர் தி பயனீர், சண்டே ஒப்சேர்வர், தி இண்டிபன்டன்ட், இந்திய போஸ்ட் போன்ற பல பத்திரிக்கைகளில் ஆசிரியராக இருந்துள்ளார்.
வினோத் மேத்தா | |
---|---|
பிறப்பு | 1941[1] ராவல்பிண்டி, பிரித்தானிய இந்தியா |
இறப்பு | தில்லி, இந்தியா | மார்ச்சு 8, 2015 (அகவை 73 )
தேசியம் | இந்தியன் |
கல்வி | இளநிலைப் பட்டம் |
படித்த கல்வி நிறுவனங்கள் | லக்னௌ பல்கலைக்கழகம் |
செயற்பாட்டுக் காலம் | 1995 - 2012 |
பணியகம் | அவுட்லுக் இந்தியா |
அறியப்படுவது | இதழாளர், ஊடகத்தில் நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை |
வாழ்க்கைத் துணை | சுமிதா பால் |
இவர் 1942 மே 31 இல் இராவல்பிண்டியில் பிறந்தார். இவர் போட்டோஹர் கட்ரி இனத்தை சேர்ந்தவராவார். ராணுவத்தில் பணிபுரிந்த இவரின் தந்தை இவரைப் பள்ளியில் சேர்க்கும் பொழுது தவறாக இவரது பிறந்த நாளை 31 மே 1942 என்று பதிந்து விட்டார். லக்னோ பல்கலைக்கழகத்தினைச் சார்ந்த லா மர்டிநிரே கல்லூரியில் இளநிலைப் பட்டம் (பி.ஏ) பெற்றார்.
இவர் மொத்தம் ஆறு புத்தகங்கள் எழுதியுள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.