நமது பால்வெளியானது பேரடை என்று குறிக்கப்பெறுவது ஈர்ப்பால் கட்டுண்ட பெருந்திரளான விண்மீன் கூட்டமும் உடுக்கண எச்சங்களும் உடுக்கணவெளி வளிமத் தூசும் கரும்பொருண்மமும் அடங்கிய வான்பொருள் தொகுதியாகும்.[1][2] ஒரு பால்வெளியில் நிரலாக, ஒரு பில்லியன் (குறும்பால்வெளி) முதல் 100 டிரில்லியன் (பெரும்பால்வெளி) (109 முதல் 1014) வரையிலான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும்.[3] ஒவ்வொரு பால்வெளியும் அதன் பொருண்மையத்தில் வட்டணையில் சுற்றிவரும்.இவை கண்ணுக்குப் புலப்படும் வடிவத்தில் நீள்வட்டவகை,[4] சுருளிவகை, ஒழுங்கற்றவகை எனப் பிரிக்கப்படுகிறது.[5] பல பால்வெளிகளில் அவற்றின் செயலார்ந்த பால்வெளி மையத்தில் கருந்துளைகளைக் கொன்டமைகின்றன. நமது பால்வெளியாகிய பால் வழியில் உள்ள சகித்தாரியசு A* எனும் கருந்துளையின் பொருண்மை சூரியனைப் போல நான்கு மில்லியன் மடங்கு பொருண்மையைக் கொண்டுள்ளது.[6] 2016 மார்ச்சு நிலவரப்படி, GN-z11 எனும் பால்வெளி தான் மிகப்ப பழைய பால்வெளியாகும். இது புவியில் இருந்து மிகத்தொலைவில் அமைந்த்து ஆகும். இது 32 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது பெரு வெடிப்புக்குப் பின்னர் 400 மில்லியன் ஆன்டுகளுக்குப் பிறகு தோன்றியதாகும்.

Thumb
பு பொ ப 4414, புவியில் இருந்து 60 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்த வகைமைச் சுருளிப் பால்வெளி, கோமா பெரெனிசெசு விண்மீன்குழு, பால்வெளியின் விட்டம் 55,000 ஒளியாண்டுகள்

இன்று கட்புலப் புடவியில் பால்வெளிகள் 200 பில்லியனுக்கும் (2×1011) முதல்[7] 2 டிரில்லியனுக்கும் (2×1012) மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளன[8][9] இவை புவியில் நிலவும் மணல்மணியினும் கூடுதலாகும் எனக் கருதப்படுகிறது.[10] பெரும்பாலான பால்வெளிகள் 1,000 முதல் 100,000 புடைநொடிகள் விட்டம் கொண்டுள்ளன, இவை ஒவ்வொன்றும் பல மில்லியன் புடைநொடிகள் இடைவெளியில் அமைகின்றன. பால்வெளிகளுக்கு இடையில் உள்ள ஊடகத்தில் தளர்வான வளிமம் ஒரு பருமீட்டரில் ஓரணு வீதத்தில் அமைந்துள்ளது. பெரும்பாலான பால்வெளிகள் ஈர்ப்பால் பால்வெளிக் குழுக்களாகவும் பால்வெளிக் கொத்துகளாகவும் பால்வெளி மீக்கொத்துகளாகவும் கட்டுண்டு இயங்குகின்றன. புடவியின் பெருங்கட்டமைப்பு நிலையில், இக்கூட்டமைவுகள் பொதுவாகச் செறிந்த வெற்றிடம் சூழ்ந்த படலங்களாசமைகின்றன.[11] இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்பு பால்வெளி மீக்கொத்துகளின் கொத்து ஆகும். இது இலானியாக்கியா எனப்படுகிறது.[12]

Thumb
பால்வெளிகளின் வடிவங்கள்

சொற்பிறப்பியல்

பால்வெளி (galaxy) எனும் சொல், பால்வழியைக் குறிக்கும் கிரேக்க மொழி சொல்லாகிய galaxias (γαλαξίας, "பால் தன்மையது"), அல்லது kyklos galaktikos ("பால் வட்டம்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும்.[13] இப்பெயர் பால் வழி அமைப்பு வானில் பால்போன்ற வெண்ணிறப்பட்டையாக அமைந்ததாலேயே ஏற்பட்டது. கிரேக்கத் தொமன்மவியலில், சியுசு தன் மகனாகிய எராக்கிளெசை இறப்புவாய்ந்த பெண்ணின் மார்பகத்தில் இருந்து, அவளை அறியாமல் பால் குடிப்பதற்காக, அவள் தூங்கும்போது பிறப்பிக்கிறார். எனவே எராக்கிளெசுவும் இறப்புவாய்ந்தவனாகப் பிறக்கிறான். அவள் விழித்தபோது தன் மார்பகத்தில் அறியாத குழந்தை பால்குடிப்பதைப் பார்த்து குழந்தையைத் தூக்கி எறிகிறாள். அப்போது சிதறும் பால்துளிகள் பால்வழி என்ற மங்கலான ஒளிப்பட்டையை உருவாக்குகின்றன.[14][15] வானியலில் ஆங்கிலத்தில் "Galaxy" என்ற சொல், புடவியில் அமைந்த பால்வெளிகளில் இருந்து வேறுபடுத்த, நம் பால்வெளியாகிய பால்வழியைக் குறிக்கலானது. இது சாசரின் காலத்தில் (1380) இருந்து ஆங்கிலத்தில் வழக்கில் இருந்துவருகிறது.

"See yonder, lo, the Galaxyë
Which men clepeth the Milky Wey,
For hit is whyt."

Geoffrey Chaucer, The House of Fame[13]

முன்பு சுருளி ஒண்முகில் எனப்பட்ட ஆந்திரமேடா பால்வெளி (M31), அவற்றில் உள்ள வான்பொருள்களின் தொலைவுகள் கண்டறியப்பட்டதும் விண்மீன்களின் திரளாகும் என அறியப்பட்டதால் இத்தகையவை புடவித்திட்டுகள் எனப்பட்டன. என்றாலும் புடவி எனும் சொல் புடைசூழ்ந்து நிலவும் அனைத்து இருப்பையும் குறிக்கப் பயன்படுத்தியதும், இவ்வழக்கு தேய்ந்தருகிப் பால்வெளிகள் எனும் சொல் வழக்கில் வந்தது.[16]

நோக்கீட்டு வரலாறு

பால் வழி பற்றியும் பிற ஒண்முகில்கள் பற்றியுமான பல கண்டுபிடிப்புகள், நாம் பல பால்வெளிகளில் ஒன்றாகிய பால் வழியில் வாழ்கிறோம் என்பதை உணரவைத்தது.

பால் வழி

கிரெக்க மெய்யியலாளராகிய தெமாக்கிரிட்டசு (கி. மு 450–370 ) இரவு வானிலே கண்ணுறும் வெண்பட்டை எனும் பால் வழி, தொலைவில் அமைந்த விண்மீன்களின் தொகுப்பாகலாம் என முன்மொழிந்தார்.[17] என்றாலும் அரிசுட்டாட்டில் (கி. மு 384–322), பால்வழி என்பது "நெருங்கியுள்ள எண்ணற்ற பெரிய விண்மீன்களின் மூச்சுவிடுதலால் மூண்ட நெருப்பால் ஆனதாகும்" என நம்பினார்". மேலும் "இந்த நெருப்பு மூளுதல் விண்ணியக்கங்களின் தொடர்ச்சியாக அமைந்த புவிசார் வளிமண்டல மேற்கோளப் பகுதியில் நிலாவுக்கும் கீழாக நிகழ்வதாகவும்" கருதினார்.[18] புதுப்பிளாட்டோனிய மெய்யியலாளரான இளவல் ஒலிம்பியோதோரசு (கி.பி 495–570) இதை ஐயத்துடன் பார்த்தார். பால்வழி நிலாக் கீழ் நிகழ்வாக இருந்தால், அதாவது, புவிக்கும் நிலாவுக்கும் இடையில் நிகழ்வதாக இருந்தால், புவியிடத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப வேறுபாட்டோடு தோன்றவேண்டும். மேலும் இடமாறு தோற்றப்பிழையோடு அமையவேண்டும். ஆனால் அப்படி பால்வழி அமையவில்லை. எனவே, இவரது கண்ணோட்டத்தின்படி, பால் வழி விண்கோளம் சார்ந்ததாகும்.[19]

மொகானி முகம்மது கூறுகிறபடி, அரேபிய வானியலாளராகிய அல்காசன் (கி. பி 965–1037) தான் முதலில் பால் வழியை நோக்கி அதன் இடமாறு தோற்றப்பிழையை அளக்க முயன்றார்,[20] இவர் "பால் வழி இடமாறு தோற்றப்பிழையுடன் அமையாததால், இது புவியில் இருந்து நெடுந்தொலைவில் அமைந்திருக்கவேண்டும். இது வளிமண்டலம் சார்ந்ததல்ல" எனத் தீர்மானித்தார். " [21] பாரசீக வானியலாளராகிய அல்-புரூனி (கி. பி 973–1048) "பால் வழிப் பால்வெளி எண்ணற்ற வளிம முகில் விண்மீன்களின் தொகுப்பே" என முன்மொழிந்தார். "[22][23] அண்டாலூசிய வானியலாளராகிய இபின் பாட்சா ("Avempace", d. 1138)பால் வழி பால் வழி ஒன்றையொன்று தொட்டுக்கொண்டுள்ள நிலாவடிப் பொருளின் ஒளிவிலகலால் தொடர்ச்சியானதாகத் தோன்றும் எண்ணற்ற விண்மீன்களின் தொகுப்பேயாகும் என முன்மொழிந்தார்.[18][24] இத்தொடர்ச்சியை மேலும் அவர் வியாழன், செவ்வாய் கூட்டிணைவு நோக்கீட்டுடன் ஒப்பிட்டு இருவான்பொருள்கள் அருகருகே நிலவும்போது தொடர்ச்சியாகத் தோன்றுவதை விளக்கினார்.[18] In the 14th century, the Syrian-born Ibn Qayyim proposed the Milky Way galaxy to be "a myriad of tiny stars packed together in the sphere of the fixed stars."[25]

Thumb
வில்லியம் எர்ழ்சல் 1785 இல் விண்மீன்களின் எண்ணிக்கையின்படி மதிப்பீடு செய்யப்பட்ட பால் வழியின் உருவடிவம்; சூரியக் குடும்பம் பால் வழி மையத்துக்கு அருகே அமைவதாகக் கருதப்பட்டது.

பால் வழி எண்ணற்ற விண்மீன்களால் ஆனது எனும் நிறுவல், 1610 இல் கலீலியோ தொலைநோக்கி வழியாக பால் வழியாக ஆய்ந்தபோது மெய்ப்பிக்கப்பட்டது, இவர் தன் ஆய்வினால் பால் வழி ஏராளமான மங்கலான விண்மீன்களால் ஆகியது என்பதைக் கண்டறிந்தார்.[26][27]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.