வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் (National Gallery of Art ) என்பது ஐக்கிய அமெரிக்கா நாட்டின் தலைநகரான வாசிங்டனில் உள்ள அருங்காட்சியகம் ஆகும். 1937இல் துவக்கப்பட்ட இவ்வருங்காட்சியகத்தைப் பார்வையாளர்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம்.
இவ்வருங்காட்சியகம் மேற்குக் கட்டடம், கிழக்குக் கட்டடம் என இரண்டு கட்டடங்களைக் கொண்டு இயங்குகிறது. மேற்குக் கட்டடம் மரபுசார்ந்த முறையிலும் கிழக்குக்கட்டடம் நவீன முறையிலும் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு கட்டடங்களிலும் வாயில்கள் உள்ளன எதில் வேண்டுமானாலும் நுழையலாம் இரு கட்டடங்களையும் இணைக்கும் விதத்தில் ஒரு சுரங்கப்பாதை உள்ளது.
கிழக்குக் கட்டடத்தின் நுழைவாயிலில் ஹென்றிமூரின் மிகப்பெரிய நவீனச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இக்கட்டடத்தில் நவீன மற்றும் சமகால ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஓவியங்கள், கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் சிறப்பு காட்சிக்கூடம் இக்கட்டத்தில்தான் உள்ளது. இக்கட்டடம் வெளிப்புறமட்டுமல்லாது உட்புறமும் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு அமெரிக்காவின் சமகால ஓவியர்களின் ஓவியங்களும்,சிற்பங்களும், நவீனபாணி ஓவியர்களான பிக்காசோ, மேக்ஸ் பெக்மன் போன்ற புகழ்வாய்ந்த பல கலைஞர்களின் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]
இக்கட்டடம் தரைத்தளம், முதன்மைத்தளம் என இரு தளங்களைக்கொண்டுள்ளது. முதன்மைத்தளத்தில் 93 அறைகள் உள்ளன. இக்கட்டடத்தில் பதின் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டுவரையிலான ஐரோப்பிய, அமெரிக்க ஓவியங்களும்,சிற்பங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. லியானார்டோ டாவின்சியின், ஜினோவ்ரா தெ பென்சி (Ginevra de Benci) ஓவியம் இங்குதான் உள்ளது.
கிழக்குக் கட்டடத் திருப்பம்
கிழக்குக்கட்டத்தின் உட்புறத் தோற்றம்
மேற்கு மற்றும் கிழக்குக் கட்டடங்கள் (பின்னணியில் தெரிவது) ஐக்கிய அமெரிக்காவின் தலைமையகம்
மேற்கு கட்டடத்தில் நுழையும் பள்ளிக் குழந்தைகள்
மேற்குக் கட்டம் கட்டப்பட்ட புதிதில்
தேசிய கலைக்காட்சியகமும் அதைச் சுற்றிய இடங்களும் செயற்கைக்கோள் ஒளிப்படத்தின்வழியாக