From Wikipedia, the free encyclopedia
வள்ளி (Valli) தமிழ் கடவுளான முருகனின் மனைவி ஆவார். முனிவனின் பார்வையால் பெண்மானின் வயிற்றில் குழந்தையாய்ப் பிறந்தவள் வள்ளி.[சான்று தேவை] குறவர்களால் கண்டெடுக்கப்பட்டு, அவர்கள் குல வழக்கப்படி தினைப்புனம் காத்து வந்த பொழுது முருகப்பெருமான் விருத்த வடிவில் வள்ளியம்மையை மணந்து கொண்டான்.[1]
வள்ளி | |
---|---|
வள்ளி தெய்வானையுடன் உற்சவ மூர்த்தியாக முருகன் | |
தேவநாகரி | பழனிமலை |
தமிழ் எழுத்து முறை | வள்ளி |
இடம் | பழனிமலை |
துணை | முருகன் |
இவ்வாறு நடந்த இடம் கதிர்காமம் என்னும் இலங்கையின் தென்பால் அமைந்திருக்கும் திருத்தலமாகும். இதற்குச் சான்றாக இன்றும் வேட்டுவ முறைகளிலே இங்கு பூசை வழிபாடுகள் நடந்து வருகின்றன. வள்ளியம்மையாருக்கு தனிக் கோவிலும் அமைக்கப் பெற்றிருத்தலை காணலாம்.
வள்ளி வள்ளல் என்பதன் பெண்பால், வள்ளல்-முருகப்பெருமானின் மனைவி, வள்ளிக்கிழங்கு அகழ்ந்த குழியில் கண்டெடுக்கப்பட்டவள் என்பது கதை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.