நடன இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் தயாபரன் அவர்கள் விட்டிருந்தது கோடி கணக்ண பணம் மற்றும் ஆபரண From Wikipedia, the free encyclopedia
வருவாய்த் துறை, தமிழ்நாடு அரசின் தொன்மையான துறைகளில் ஒன்றாகும். இத்துறை முதலில் பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் கி.பி. 1786-இல் தொடங்கப்பட்டது.
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1811 |
ஆட்சி எல்லை | தமிழ் நாடு |
தலைமையகம் | சென்னை |
அமைச்சர் |
|
அமைப்பு தலைமைகள் |
|
மூல அமைப்பு | தமிழ் நாடு அரசு |
வலைத்தளம் | Revenue Department |
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் 1781-இல் வருவாய் வாரியம் உருவாக்கப்பட்டது. முதல் வருவாய் வாரியம் 1786-இல் வங்காள மாகாணத்திலும் அதனைத்தொடர்ந்து சென்னை மாகாணத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் அனைத்து மாகாணங்களிலும் தோற்றுவிக்கப்பட்டது. தமிழகத்தில் 1980-ஆம் ஆண்டில் தமிழ்நாடு வருவாய் வாரியம் ஒழிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை உருவாக்கப்பட்டது.
2004 சுனாமிக்குப் பின்னர் பேரிடர் மேலாண்மையை நிருவகிக்கவும், பேரிடரைத் தணிக்கவும் 2005-ஆம் ஆண்டு முதல் வருவாய்த் துறையானது வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிக்கும் துறை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1]
1. தமிழ்நாடு அரசின் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தி மக்களுக்கு சேவை செய்தல்
2. இயற்கை இடர்பாடுகளின் போது நிவாரணமும் அதன்படி மறுசீரமைப்பும் செய்தல்
3. அரசு நிலங்களைப் பாதுகாத்தல், அவை தொடர்பான ஆவணங்களை பராமரித்தல்
4. நிலவகை மாற்றம், நில ஒப்படை, அரசு நில குத்தகை, நிலக்கொடை, ஆக்ரமணம், நில உரிமை மாற்றம், நில எடுப்பு, பட்டா வழங்கல், நில சீர்திருத்தம், வரிவிதித்து வசூலித்தல் போன்ற பணிகளையும் வருவாய்த்துறை செய்கிறது.
வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத் துறையானது ஐந்து இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தலைமையிலான ஆணையாளர்கள் ஐந்து துறைகளை நிர்வகிக்கின்றனர். அவைகள் பின்வருமாறு:
2004 சுனாமிக்குப் பின்னர்த் தமிழ்நாடு அரசு 2005-இல் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை முகமை மூலம் கொள்கைகள் வகுத்துள்ளது. அரசு ஆணை எண் 143 வருவாய் என்சி 1(2), நாள்: 27.05.2013-இன்படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. [7] பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 14(2)-இன்படி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழுவின் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக அதிகபட்சம் 9 நபர்கள் இருப்பர்.[8]
பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 25(2)-இன்படி அதிகபட்சம் 7 உறுப்பினர்கள்
இந்திய அரசின் பங்கு - 75% மாநில அரசின் பங்கு - 25%
இந்திய அரசின் பங்கு - 90% மாநில அரசின் பங்கு - 10%
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.