From Wikipedia, the free encyclopedia
ழான்-குளோடு சுன்கர் (Jean-Claude Juncker, இலுகுசெம்பூர்கிய உச்சரிப்பு: [ʒ̊ɑ̃ːkloːd ˈjʊŋ.kɐ]; பிறப்பு 9 திசம்பர் 1954) லக்சம்பர்க் அரசியல்வாதியும் 12வது ஐரோப்பிய ஆணையத் தலைவரும் ஆவார். சுங்கர் 1995 முதல் 2013 வரை லக்சம்பர்க் பிரதமராகவும் 1989 முதல் 2009 வரை நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். ஐரோக்குழுமத்தின் முதல் நிரந்தர தலைவராக 2005 முதல் 2013 வரை பொறுப்பில் இருந்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில், நீண்டநாட்கள் அரசுத்தலைவராக விளங்கிய பெருமை இவருக்குண்டு. உலகளவிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் நீண்டநாட்கள் பதவியில் இருந்தவர் என்ற சாதனைக்கும் உரியவர்.[1] இவரது பதவிகாலத்தில் ஐரோப்பிய நிதி நெருக்கடி உச்சக்கட்டமாக இருந்தது.
ழான்-குளோடு சுன்கர் | |
---|---|
ஐரோப்பிய ஆணையத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 நவம்பர் 2014 | |
துணை அதிபர் | பிரான்சு டிம்மெர்மான்சு |
முன்னையவர் | ஒசே மானுவல் பர்ரோசோ |
லக்சம்பர்க் பிரதமர் | |
பதவியில் 20 சனவரி 1995 – 4 திசம்பர் 2013 | |
ஆட்சியாளர்கள் | ஜீன் ஹென்றி |
Deputy | ழாக் பூசு லைடி போல்பெர் ஜீன் அசெல்போர்ன் |
முன்னையவர் | ஜாக் சான்டர் |
பின்னவர் | இக்சேவியர் பெட்டல் |
நிதி அமைச்சர் | |
பதவியில் 14 சூலை 1989 – 23 சூலை 2009 | |
பிரதமர் | ஜாக் சான்டர் |
முன்னையவர் | ஜாக் சான்டர் |
பின்னவர் | லுக் பிரீடன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 திசம்பர் 1954 ரெடேஞ்சு, லக்சம்பர்க் |
அரசியல் கட்சி | கிறித்தவ சோசலிச மக்கள் கட்சி |
துணைவர் | கிறிஸ்டியான் பிரிசிங் |
முன்னாள் மாணவர் | இசுட்ராசுபோர்கு பல்கலைக்கழகம் |
சமயம் | உரோமைக் கத்தோலிக்கம் |
கையெழுத்து | |
சுங்கர் ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) சார்பாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் இவரது கட்சி 751 இடங்களில் 220 இடங்களில் வென்றது.[2] சூன் 27 இல், ஐரோப்பிய மன்றம் அலுவல்முறையாக சுங்கரை தலைவர் பதவிக்கு நியமித்தது.[3][4] சூலை 15இல் ஐரோப்பிய நாடாளுமன்றம் இவரைத் தேர்ந்தெடுத்தது; வாக்களித்த 729 பேரில் 422 பேரின் வாக்குகளை இவர் பெற்றார்.[5] இவர் நவம்பர் 1,2014 அன்று ஓசே மானுவல் பர்ரோசோவிடமிருந்து ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.