எமிலி அகஸ்டா லூயிஸ் "லிஸ்ஸி" லிண்ட் ஆவ் ஹகேபி (ஆங்கிலம்: Emilie Augusta Louise "Lizzy" Lind af Hageby) (20 செப்டம்பர் 1878–26 டிசம்பர் 1963) ஒரு சுவீடனிய-பிரித்தானிய பெண்ணியவாதியும்விலங்குரிமை ஆர்வலருமாவார். அவர் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இங்கிலாந்தில் ஒரு முக்கிய உடற்கூறாய்வு எதிர்ப்பு ஆர்வலராக அறியப்பட்டவர்.[1]
விரைவான உண்மைகள் லிஸ்ஸி லிண்ட் அவ் ஹகேபி, பிறப்பு ...
லிஸ்ஸி லிண்ட் அவ் ஹகேபி
லிஸ்ஸி லிண்ட் அவ் ஹகேபி, டிசம்பர் 1913
பிறப்பு
எமிலி அகஸ்டா லூயிஸ் லிண்ட் ஆவ் ஹகேபி (1878-09-20)20 செப்டம்பர் 1878 ஜான்கோபிங், ஸ்வீடன்
இறப்பு
26 திசம்பர் 1963(1963-12-26) (அகவை85) 7 செயின்ட் எட்மண்ட்ஸ் டெரெஸ், செயின்ட் ஜான்ஸ் வூட், இலண்டன்
குடியுரிமை
ஸ்வீடனிய, பிரித்தானிய
படித்த கல்வி நிறுவனங்கள்
செல்டென்ஹாம் மகளிர் கல்லூரி இலண்டன் மகளிர் மருத்துவப் பள்ளி
பணி
எழுத்தாளர், உடற்கூறாய்வு எதிர்ப்பு ஆர்வலர்
அமைப்பு(கள்)
விலங்குப் பாதுகாப்பு மற்றும் உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம்
தி ஷம்பிள்ஸ் ஆவ் சயின்ஸ்: எக்ஸ்ட்ராக்ட்ஸ் ஃப்ரம் த டைரி ஆவ் டூ ஸ்டூடன்ட்ஸ் ஆவ் ஃபிசியாலஜி (1903)
பெற்றோர்
எமில் லிண்ட் அவ் ஹகேபி (தந்தை)
மூடு
ஒரு புகழ்பெற்ற சுவீடனிய குடும்பத்தில் பிறந்தவரான லிண்ட் அவ் ஹகேபி, மற்றொரு சுவீடனிய ஆர்வலரோடு இணைந்து தங்கள் உடற்கூறாய்வு எதிர்ப்புக் கல்வியறிவினை மேம்படுத்த எண்ணி 1902-ல் இலண்டன் பெண்கள் மருத்துவப் பள்ளியில் சேர்ந்தனர். இருவரும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் உடற்கூறாய்வு வகுப்புகளில் கலந்துகொண்டு 1903-ம் ஆண்டு அந்த அனுபவங்களைப் பற்றிய தங்களது குறிப்பேடுகளின் தொகுப்பினை தி ஷம்பிள்ஸ் ஆவ் சயின்ஸ்: எக்ஸ்ட்ராக்ட்ஸ் ஃப்ரம் த டைரி ஆவ் டூ ஸ்டூடன்ட்ஸ் ஆவ் ஃபிசியாலஜி என்ற தலைப்பில் வெளியிட்டனர். இதில் அங்கிருந்த ஆராய்ச்சியாளர்கள் போதுமான மயக்க மருந்து இல்லாமல் உயிரோடு ஒரு நாயை உடற்கூறாய்வு செய்தைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன. பழுப்பு நாய் விவகாரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊழல் விவகாரத்தின் விளைவாக அதனைத் தொடர்ந்து தொடரப்பட்ட அவதூறு வழக்கு, ஆராய்ச்சியாளர்களில் ஒருவருக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல், மருத்துவ மாணவர்களால் இலண்டனில் ஏற்பட்ட கலவரம் என பல முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின.[2]
இவற்றைத் தொடர்ந்து 1906-ம் ஆண்டு லிண்ட் அவ் ஹகேபி விலங்குப் பாதுகாப்பு மற்றும் உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கத்தை (Animal Defence and Anti-Vivisection Society) இணைந்து நிறுவினார். பின்னர் ஹாமில்டனின் சீமாட்டியுடன் சேர்ந்து டார்செட்டில் உள்ள ஃபெர்ன் ஹவுஸில் விலங்குகள் சரணாலயம் ஒன்றை நடத்தினார். அவர் 1912-ல் பிரித்தானிய குடிமகளாக ஆனார். அதன் பின்னர் தனது வாழ்நாள் முழுவதையும் விலங்குகள் பாதுகாப்பு பற்றியும் அதற்கும் பெண்ணியத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி எழுதுவதிலும் உரையாற்றுவதிலும் செலவிட்டார்.[3][4] சிறந்த சொற்பொழிவாளராக அறியப்பட்ட ஹகேபி, தனது பிரச்சாரங்களை விமர்சித்த பால் மால் கஜெட் என்ற இதழை எதிர்த்து அவதூறு வழக்கு ஒன்றை 1913-ம் ஆண்டில் தொடர்ந்தார். தோல்வியில் முடிந்த அவ்வழக்கின் விசாரணையின் போது 210,000 சொற்களைப் பயன்படுத்தி உரையாற்றியதும் 20,000 கேள்விகளைக் கேட்டதும் புதிய சாதனையாகக் கருதப்பட்டது. இதுவே ஒரு விசாரணையில் உரைக்கப்பட்ட சொற்களின் அதிகப்பட்ச எண்ணிக்கையாகும்.[5] "முழுக்க முழுக்க ஒரு பெண்ணால் நடத்தப்பட்டாலும், ரஸ்ஸலின் காலத்திற்குப் பின்னர் வழக்குரைஞர் கழகம் கண்ட மிகவும் புத்திசாலித்தனமான வாதம் இது" என்று தி நேஷன் நாளிதழ் அவரது சாட்சியத்தைப் பாராட்டியது.[6][7]
நூல்கள்
(1903). with Leisa Katherine Schartau, The Shambles of Science: Extracts from the Diary of Two Students of Physiology, Ernest Bell.
(1908). "Blue book lessons, a brief survey of the first three volumes of minutes of evidence given before the Royal commission on vivisection," pamphlet.
(1909) onwards (ed.). The Anti-Vivisection Review. The Journal of Constructive Anti-Vivisection, St. Clements Press.
(1909). (ed). "The Animals' Cause", selection of papers contributed to the International Anti-Vivisection and Animal Protection Congress, London, 6–10 July 1909.
Lisa Gålmark, Shambles of Science, Lizzy Lind af Hageby & Leisa Schartau, anti-vivisektionister 1903-1913/14, History Department, Stockholm University, 1996, published by Federativ Publ., 1997, pp. 45-47.