லியோன் திரொட்ஸ்கி (Leon Trotsky, உருசிய மொழி: Лeв Давидович Трóцкий, Lev Davidovich Trotsky நவம்பர் 7 1879 – ஆகத்து 21 1940), உக்ரேனில் பிறந்த போல்ஷெவிக் புரட்சியாளரும் மார்க்சிசக் கொள்கையாளரும் ஆவார். இவரது இயற் பெயர் லேவ் டாவீடொவிச் புரொன்ஸ்டெயின் (Lev Davidovich Bronstein) என்பதாகும். சோவியத் ஒன்றியத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு முன்னணி அரசியல்வாதியாகத் திகழ்ந்த இவர் முதலில் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாக இருந்தார். பின்னர் செஞ்சேனை அமைப்பாளராகவும் பொறுப்பாளராகவும் இருந்தார். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்தார்.
லியோன் ட்ரொட்ஸ்கி | |
---|---|
ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் | |
பதவியில் நவம்பர் 8, 1917 – மார்ச் 13, 1918 | |
Deputy | கியோர்கி சிச்செரின் |
முன்னையவர் | மிக்கைல் டெரெஸ்சென்கோ |
பின்னவர் | கியோர்கி சிச்செரின் |
பெட்ரோகிராட் சோவியத் தலைவர் | |
பதவியில் அக்டோபர் 8, 1917 – நவம்பர் 8, 1917 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நவம்பர் 7, 1879 கேர்சன், ரஷ்யா |
இறப்பு | ஆகத்து 21, 1941 (அகவை 60) மெக்சிக்கோ |
அரசியல் கட்சி | ரஷ்ய சோசியல் சனநாயகத் தொழிற் கட்சி, சுவிட்சர்லாந்து சோசியல் சனநாயகக் கட்சி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி |
துணைவர் | நத்தாலியா செடோவா |
தொழில் | அரசியல்வாதி, பத்திரிகையாளர் |
கையெழுத்து | |
1920களில் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது தீவிர கொள்கைகளுக்கும் எதிராகப் போர் தொடுத்து தோல்வி கண்டார். அதன் பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். வெளிநாடுகளில் இருந்த படியே ஸ்டாலினுக்கெதிராக செயற்பட்டார். இறுதியாக மெக்சிக்கோவில் வைத்து சோவியத் உளவாளியான ரமோன் மேர்காடெர் என்பவனால் ஆகத்து 20 இல் பனிக்கோடரி ஒன்றினால் குத்தப்பட்டுப் படுகாயமடைந்தவர் அடுத்த நாள் ஆகத்து 21 இல் இறந்தார்[1]. திரொட்ஸ்கியின் கொள்கைகள் திரொட்ஸ்கியிசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகிறது. ஸ்டாலினிசக் கொள்கைகளில் இருந்து வேறுபட்டதாக கம்யூனிசத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு அமைவாக திரொட்ஸ்கியிசம் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.