லீபெத்சுக் மாகாணம் (Lipetsk Oblast, உருசியம்: Ли́пецкая о́бласть, லீபெத்ஸ்கயா ஓபிலாஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் லீபெத்சுக் நகரம். 2010 மக்கள் கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 1.173.513 ஆக இருந்தது.[9]

விரைவான உண்மைகள் லீபெத்சுக் மாகாணம்Lipetsk Oblast, நாடு ...
லீபெத்சுக் மாகாணம்
Lipetsk Oblast
Липецкая область
Thumb
கொடி
Thumb
சின்னம்
பண்: எதுவுமில்லை[1]
Thumb
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்மத்திய[2]
பொருளாதாரப் பகுதிமத்திய[3]
நிர்வாக மையம்லீபெத்சுக்[4]
அரசு
  நிர்வாகம்லிபெத்சுக் பேரவை[5]
  தலைவர்[6]ஒலெக் கொரொலியோவ்[7]
பரப்பளவு
  மொத்தம்24,100 km2 (9,300 sq mi)
  பரப்பளவு தரவரிசை71வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9]
  மொத்தம்11,73,513
  மதிப்பீடு 
(2018)[10]
11,50,201 (−2%)
  தரவரிசை44வது
  அடர்த்தி49/km2 (130/sq mi)
  நகர்ப்புறம்
63.7%
  நாட்டுப்புறம்
36.3%
நேர வலயம்ஒசநே+3 ([11])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-LIP
அனுமதி இலக்கத்தகடு48
OKTMO ஐடி42000000
அலுவல் மொழிகள்உருசியம்[12]
இணையதளம்http://admlip.ru/
மூடு

புவியியல்

லீபெத்ஸ்க் ஒப்லாஸ்துவின் எல்லைகளாக வடகிழக்கில் ரயாசன் ஒப்லாஸ்து, கிழக்கில் தாம்போவ் ஒப்லாஸ்து, தெற்கில் வரனியோஷ் ஒப்லாஸ்து தென்மேற்கில் கூர்ஸ்க் ஒப்லாஸ்து மேற்கில் ஓரயல் ஒப்லாஸ்து வடமேற்கில் தூலா வட்டாரம் ஆகியவை அமைந்துள்ளன.

பொருளாதாரம்

இந்த மாகாணத்தில் இரும்பு, இயந்திரப் பொறியியல் போன்ற மிகவும் முக்கியமான தொழிற்துறைகளின் கிளைகள் உள்ளன. பல தொழில் நகரங்களின் நிர்வாக மையமாக லீபெத்ஸ் நகரம் விளங்குகிறது, பிராந்தியத்தில் உள்ள எலிட்ஸ் நகரம் எரிபொருள் மற்றும் ஆற்றல் வணிக மையமாக உள்ளது. எரிவாயு குழாய், மின்னாற்றல் பாதை ஆகியவற்றின் வலைப்பின்னலின் முதன்மையான மையமாக விளங்குகிறது.

வேளாண்மை

பிராந்தியத்தில் வேளாண்மையில் பயிர் சாகுபடி மற்றும் தோட்டக்கலை பயிர்கள் போன்றவை அடிப்படையாக உள்ளன. மேலும் கால்நடைகளான மாடுகள், பன்றிகள் , ஆடுகள் , செம்ரிகள், கோழிகள் வளர்ப்பு மற்றும் பதப்படுத்தும் தொழில் மிகவும் சிறந்த முறையில் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,173,513 ( 2010 கணக்கெடுப்பு ); 1,213,499 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,230,220 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

இனக் குழுக்கள் (2010)[9]

  • ரஷ்யர்கள் : 96,3%
  • உக்ரைனியர்கள் : 0.9%
  • ஆர்மேனியர்கள் : 0.6%
  • அசர்பைஜனியர் : 0.3%
  • பிறர்: 1.9%
  • 45.268 பேர் மற்ற இனங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.

மொத்த கருத்தரிப்பு விகிதம்[13]
2003 - 1,24 | 2004 - 1,28 | 2005 - 1,27 | 2006 - 1,28 | 2007 - 1,36 | 2008 - 1,43 | 2009 - 1,44 | 2010 - 1,47 | 2011 - 1,47 | 2012 - 1.63 | 2013 - 1.60 | 2014 - 1.66 (இ)

சமயம்

2012 இன் உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[14] லீபெத்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 71.3% உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 3% திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்துவர் , 1% முஸ்லிம்கள் , மற்றும் 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம் (ஸ்லாவிக் நியோபகனியம்) . மக்கள் தொகையில் 15% ஆன்மீக மத நாட்டம் அற்றவர்கள். 6% நாத்திகர் , மற்றும் 2.7% மற்ற மதங்களைசேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[14]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.