From Wikipedia, the free encyclopedia
லிங்கன் (Lincoln) என்பது ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உருவாக்கி ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 2012ஆம் ஆண்டு வெளியான வரலாற்று-நாடக முறை திரைப்படம் ஆகும். இதில் டேனியல் டே-லூயிஸ் என்பவர் அமெரிக்க அதிபரான ஆபிரகாம் லிங்கனாகவும் சேல்லி ஃபீல்ட் என்பவர் லிங்கனின் மனைவி மேரி டாட் லிங்கனாகவும் நடித்துள்ளனர்.[3]
Lincoln லிங்கன் | |
---|---|
அரங்க விளம்பரப் படம் | |
இயக்கம் | ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் |
தயாரிப்பு | ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், கேத்லீன் கென்னடி |
மூலக்கதை | டோரிஸ் கேர்ண்ஸ் குட்வின் எழுதிய Team of Rivals: The Political Genius of Abraham Lincoln என்னும் நூல் படைத்தவர் |
திரைக்கதை | டோனி குஷ்னர் |
இசை | ஜாண் வில்லியம்ஸ் |
நடிப்பு | டேனியல் டே-லூயிஸ் சேல்லி ஃபீல்ட் டேவிட் ஸ்ட்ராட்டைர்ன் ஜோசப் கோர்டன்-லெவிட் ஜேம்ஸ் ஸ்பேடர் ஹேல் ஹோல்ப்ரூக் டாம்மி லீ ஜோண்ஸ் |
ஒளிப்பதிவு | ஜேனஸ் கமீன்ஸ்கி |
படத்தொகுப்பு | மைக்கிள் கான் |
கலையகம் | ட்ரீம்வொர்க்ஸ் ஸ்டூடியோஸ் ரிலயன்ஸ் என்டெர்ட்டெய்ன்மென்ட் பார்ட்டிசிப்பன்ட் மீடியா ஆம்ப்ளின் என்டெர்ட்டெய்ன்மென்ட் தி கென்னடி/மார்ஷால் குழு |
விநியோகம் | டச்ஸ்டோன் பிக்சர்ஸ் (டொமஸ்டிக்) 20ஆம் நூற்றாண்டு பாக்ஸ் (பன்னாட்டளவில்) |
வெளியீடு | அக்டோபர் 8, 2012 (நியூ யார்க் திரைப்படத் திருவிழா) நவம்பர் 9, 2012 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 150 நிமிடங்கள்[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $50-65 மில்லியன்[2] |
மொத்த வருவாய் | $107,898,000[2] |
டோரிஸ் கேர்ண்ஸ் குட்வின் என்பவர் ஆபிரகாம் லிங்கனின் வரலாறாக எழுதிய Team of Rivals: The Political Genius of Abraham Lincoln என்னும் நூலின் ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டு "லிங்கன்" திரைப்படம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கையின் இறுதி நான்கு மாதங்களில் நடந்த வரலாற்றுச் சிறப்பான நிகழ்வுகள் இந்த திரைப்படத்தில் விவரிக்கப்படுகின்றன. குறிப்பாக 1865 சனவரி மாதம் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பாராளுமன்றத்தின் கீழவையில், அமெரிக்காவில் நிலவிய அடிமைத்தன முறையை ஒழிக்க சட்டம் இயற்றுவதற்காக லிங்கன் மேற்கொண்ட முயற்சிகள் இந்த வரலாற்றுத் திரைப்படத்தில் உயிரோட்டமாக சித்தரிக்கப்படுகின்றன.
படப்பிடிப்பு 2011, அக்டோபர் 17ஆம் நாள் தொடங்கியது.[4] திசம்பர் 19, 2011இல் முடிந்தது.[5] படம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் 2012, நவம்பர் 9ஆம் நாள் வெளியானது. பரவலாக ஐக்கிய அமெரிக்காவில், நவம்பர் 16இல் வெளியானது.[6] 2012, சனவரி 25ஆம் நாள் ஐக்கிய இராச்சியத்திலும் உலகின் பிற இடங்களிலும் வெளியிடுவதாகத் திட்டம்[7]
லிங்கன் திரைப்படம் பரவலாகப் பாராட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆபிரகாம் லிங்கனாக நடிக்கும் டேனியல் டே-லூயிஸ் மிகச் சிறப்பாக நடித்துள்ளதாகப் புகழ் பெற்றுள்ளார். மிகச்சிறந்த நடிகர் அக்காதெமி விருதினை அவர் பெறுவார் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.