ரேபரலி
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ரேபரேலி (Raebareli) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் ரேபரேலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் சாய் ஆற்றின் கரையில் உள்ளது.[3]ரேபரேலி மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கில் 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. ரேபரேலி லக்னோ - அலகாபாத் இடையே செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ரேபரேலி நகரத்தின் மக்கள் தொகை 1,91,316 ஆகும்.[4]
ரேபரேலி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°13′25″N 81°14′25″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ரேபரேலி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | ரேபரேலி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 43 km2 (17 sq mi) |
ஏற்றம் | 110 m (360 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 1,91,316 |
• அடர்த்தி | 739/km2 (1,910/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி |
• எழுத்தறிவு | 81% |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 229 001 |
தொலைபேசி குறியீடு | 0535 |
வாகனப் பதிவு | UP-33 |
பாலின விகிதம் | 915 பெண்களுக்கு /1000 ஆண்கள் |
வானூர்தி நிலையம் | ஃபர்சத்கஞ்ச் விமானதளம் |
இணையதளம் | raebareli |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 43 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ரேபரேலி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,91,316 ஆகும். இதன் மக்கள் தொகையில் ஆண்கள் 99,903 மற்றும் 91,413 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 915 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 20,140 ஆகும். சராசரி எழுத்தறிவு 81.23 % ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 27,747 மற்றும் 234 ஆகவுள்ளனர்.[5] இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 73.95 %, இசுலாமியர்கள் 24.67%, சீக்கியர்கள் 0.71 % மற்றும் பிறர் 0.40% ஆக உள்ளனர்.இதன் மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 27,747 மற்றும் 234 ஆகவுள்ளனர்.[6]
ரேபரேலி சந்திப்பு தொடருந்து நிலையம், வாரணாசி-ரேபரேலி-லக்னோ மற்றும் லக்னோ-ரேபரேலி -அலகாபாத் செல்லும் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.