From Wikipedia, the free encyclopedia
உருக்மி பாகவத புராணத்தின்படி, உருக்மி விதர்ப நாட்டின் அரசன். இவர் பீசுமகனின் மகனும் ருக்மணியின் அண்ணனும், கிருஷ்ணரின் மைத்துனரும் ஆவார். இவர் தனது தங்கை ருக்மணியை சேதி நாடு அரசன் சிசுபாலனுக்கு மணமுடிக்க எண்ணியிருந்த வேளையில் கிருட்டிணன் ருக்மணியைக் கவர்ந்து சென்று மணந்துகொண்டார். இதனால் உருக்மி கிருட்டிணனுடன் போரிட்டுத் தோற்றார். கிருட்டிணன் உருக்மியைக் கொல்ல முனைகையில் உருக்மணி தனது அண்ணனை விட்டுவிடுமாறு கிருட்டிணனிடம் கேட்டக் கொண்டதால் இவரை விட்டுவிட்டார். எனினும் தோற்றதால் உருக்மி மொட்டையடித்துக் கொள்ள வேண்டும் என்று கிருஷ்ணர் கட்டளையிட்டார்.
உருக்மி இதன் பின்னர் தனது நாட்டின் தலைநகரான குந்தினாபுரிக்குத் திரும்பவே இல்லை. அவர் போசக்கதா என்னும் புதிய தலைநகரை உருவாக்கி அங்கிருந்து நாட்டை ஆண்டார். பின்னாளில் அவர் கிருட்டிணனிடம் நட்புக் கொண்டார். எனினும் பாரதப் போரின் போது இவரை அருச்சுனனோ மற்றும் துரியோதனனோ கூட்டாளியாக ஏற்காததால் இவர் அப்போரில் நடுநிலைமை வகித்தார்.
ருக்மியின் தந்தை விதர்ப்ப நாட்டின் மன்னர் பிஷ்மகர்,தங்கை ருக்மணி,மகள் ருக்மாவதி,பேத்தி ரோசனா ஆவார்கள்
தனது தங்கை ருக்மணியை தன் நண்பனான சேடி நாட்டு அரசன் சிசிபாலனுக்கு மணமுடிக்க எண்ணி தன்னேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்கிறார் ருக்மி,கண்ணன் கதைகள் முலம் அவனை அறிந்து கண்ணன்மீது காதல்கொண்ட ருக்மணி,சிசுபாலனுடனான திருமணத்தை வெறுக்கிறாள்,உத்தவன் என்ற அந்தணர் மூலம் தன் காதல் கடிதத்தை கிருஷ்ணருக்கு அணுப்பி தன்னை கவர்ந்து செல்லுமாறு கண்ணனிடம் வேண்டுகிறாள்.திருமணத்திற்கு முன் பார்வதி தேவி ஆலயத்திற்கு தனியே வழிபட வரும் ருக்மணியை தன் தேரில் வந்து கண்ணன் கவர்ந்து செல்கிறார்,சுயம்வரத்தில் கலந்து கொண்ட மன்னர்கள் அனைவரும் கண்ணனை தாக்குகின்றனர்,அங்கு வந்த பலராமர் கண்ணனை விரைந்து செல்ல சொல்லி,மன்னர்களை தானே எதிர்த்து போரிட்டு வெல்கிறார். ருக்மி மட்டும் கண்ணனை தொடர்ந்து சென்று தாக்குகிறார்,இருவரின் சமரில் கண்ணன் வெல்கிறார்,ருக்மியை கொல்ல செல்லும் போது,தன் அண்ணனை உயிரோடு விட்டுவிடும் படி கூறுகிறாள் ருக்மணி,கண்ணனும் ருக்மியை கொல்லாமல் விடுகிறார்,ஆனால் வென்றதன் அடையாளமாய் அவன் தலைமுடியை மழித்துவிடுகிறார்,இதனால் அவமானம் அடையும் ருக்மி ,இனி தான் தன் தலை நகர் குந்தினாபுரிக்கு கண்ணனை வெல்லாமல் திரும்பமாட்டேன்,அதுவரை இவ்விடத்திலே இருப்பேன் என்று வஞ்சினம் உரைத்து தான் தோற்ற இடத்திலே போஜக்கதா என்னும் புது நகரொன்றை உருவாக்கிக்கொள்கிறார்
ருக்மியின் வில்லின் பெயர் விஜயம்(கர்ணருடைய வில்லும் விஜயம்)ஆகும்.அது இமய மலையில் வாழும் கிம்புருஷரும் ருக்மியின் ஆசானுமான துரோணர்(இவர் வேறு) ருக்மிக்கு கொடுத்த பரிசாகும்,மானுடர்களின் வில்லில் முழு உலகையும் வெல்லகூடியது முன்று முதலாவது கண்ணனின் சாரங்கம்,அடுத்து அர்ஜுனனின் காண்டீபம்,மூன்றாவது ருக்மியின் விஜயம்,அர்ஜுனனுடன் பேசும் ருக்மி”இந்த வில்லினை கொண்டு உன் எதிரி பிஷ்மர்,துரோணர்,கிருபர்,கர்ணன் யாரவது ஒருவரை கொன்று வெற்றியை உனதாக்குவேன் என்கிறார்.[1]
கண்ணனின் எதிரி என்பதால் பாண்டவர்ககள் போரில் ருக்மியின் உதவி தங்களுக்கு தேவையில்லை என்று ருக்மியை புறக்கணிக்கின்றனர்,பாண்டவர்களே ஏற்காத உங்களை நாங்களும் ஏற்க்மாட்டோம் என்று கௌரவர்களும் ருக்மியை நிராகரிக்கின்றனர்.போரில் பங்கேற்காமல் தன் நாட்டுக்கு திரும்புகிறார் ருக்மி,குருஷேத்திர போரில் பங்கேற்றாதத மன்னர்கள் இருவர் மட்டுமே ,நிராகரிக்கபட்ட ருக்மியும்,போரின் இரு தரப்பும் தனக்கு வேண்டியவர்கள் என்பதால் போரிலிருந்து ஒதிங்கிய பலராமரும் மட்டுமே,ஏனைய பாரதத்தின் மன்னர்கள் அனைவரும் போரில் பங்கேற்றனர்
ருக்மியின் மகள் ருக்மாவதியை சுயம்வரத்தில் வென்று மணமுடிக்கிறார் கிருஷ்ணனின் மகன் பிரத்தியுமனன்,தன்னை எதிர்த்தவர்களை விழ்த்தி துவாரகை சென்று சேர்கிறார் பிரத்தியுமனன்,இவர்களின் மகனும் கண்ணனின் பேரனுமான அனிருதனுக்கு ருக்மியின் பேத்தியான ரோசனாவுக்கும் திருமண விழா போஜகடத்தில் நடைபெறுகிறது,தன் தங்கைக்காக அத்திருமணத்திற்கு சம்மதிக்கிறார் ருக்மி. கிருஷ்ணன்,பலராமர்,ருக்மணி முதலான கண்ணனின் மனைவிமார்கள்,பிரத்துயுமனன் தலைமையிலான கண்ணனின் பிள்ளைகள் என அனைவரும் திருமணத்திற்கு வருகை புரிகின்றனர், திருமணத்திற்கு பிறகு கலிங்க மன்னன் ஒருவன் யாதவர்களை பழிவாக தான் உதவுவதாக ருக்மியிடம் சொல்கிறான்,அதன் படி பலராமருடன் ருக்மி பகடையாட்டம் ஆடுகிறார் முதலில் நூறு பொற்காசுகள் பணயமாக வைத்து விளையாடபடுகிறது,முதல் ஆட்டத்தில் பலராமர் தோற்கிறார்,பின் ஆயிரம் பொற்காசுகள்,அடுத்து பத்தாயிரம் பொற்காசுகளை வைத்து ஆடியும் பலராமர் தோற்கிறார்,ஏளனம் செய்ய கலிங்க மன்னன் பலராமரை நோக்கி தன் பற்களை காட்டி சிரிக்கிறான்,பலராமரால் கோபத்தை கட்டுபடுத்தமுடியவில்லை அடுத்து ஒரு லட்சம் பொற்காசுகள் வைத்து விளையாடபடுகிறது,அதி; பலராமர் வெற்றிபெறுகிறார்,ஆனால் ருக்மி தான் வெற்றி பெற்றதாக கூறுகிறார்,கலிங்கமன்னனும் அதையே கூறுகிறான்,அமைதிகாத்த பலராமர் அடுத்து பத்துலட்சம் பொற்காசுகள் வைத்து விளையாடுகிறார்,அதிலும் பலராமர் வெல்கிறார்,மீண்டும் ருக்மி பலராமர் தோற்றதாக அறிவிக்கிறார்,அப்பொழுது அசரிரீ ஒன்று”கடந்த இரு ஆட்டங்களாய் பலராமர் வென்றதே உண்மை,ருக்மி உரைப்பது முழு பொய் “என்கிறது.அதை கேட்காத ருக்மி பலராமரை இழிந்துரைக்கிறார்”மாடு மேய்த்து காடுகளில் சுற்றிதிரியும் உங்களுக்கு பகடையை பற்றி என்ன தெரியும்?பகடையாட்டமும்,போரும் க்ஷத்தியர்களுக்குடையது,உங்களுக்கானது அல்ல”என்று திட்டுகிறார்.ருக்மியின் சொல்லால் பொறுமை இழந்த பலராமர் தன் கதாயுதத்தால் ருக்மியின் மண்டையை பிளந்து கொல்கிறார்,இதனால் பயந்து ஓடிய கலிங்க மன்னனைபிடித்து வந்து தன்னை பார்த்து சிரித்த பற்கள் அனைத்தையும் பிளந்து விடுகிறார்,தன் மைத்துனன் இறந்தவுடன் தன் அண்ணன் பலராமர் பக்கம் பேசுவதா அல்லது மனைவி ருக்மணிக்காக பேசுவதா என்று எண்ணி கிருஷ்ணர் அமைதியாய் இருந்துவிடுகிறார்[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.