From Wikipedia, the free encyclopedia
கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு (Clinton Richard Dawkins", பிறப்பு: மார்ச் 26, 1941) பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவரது செல்ஃபிஷ் ஜீன் (The Selfish Gene) (1976) நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக்க உதவியது. இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரிச்சர்ட் டாக்கின்சு | |
---|---|
டெக்சாசு பல்கலைக்கழகத்தில் டாக்கின்சு, மார்ச் 2008 | |
பிறப்பு | 26 மார்ச்சு 1941 நைரோபி, கென்யா, பிரித்தானியப் பேரரசு |
வாழிடம் | ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | Ethologist and evolutionary biologist |
பணியிடங்கள் | கலிபோர்னியப் பல்கலைக்கழகம், பெர்க்லி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் புதிய கல்லூரி, ஆக்ஃசுபோர்டு |
கல்வி கற்ற இடங்கள் | பல்லியோல் கல்லூரி, ஆக்ஃசுபோர்டு |
ஆய்வு நெறியாளர் | நிக்கலாசு டின்பேர்கன் |
முனைவர் பட்ட மாணவர்கள் | அலன் கிராபன் மார்க் ரிட்லி |
அறியப்படுவது | இறைமறுப்பாளர், பகுத்தறிவு சமய எதிர்ப்பு Gene-centred view of evolution Introduction of meme concept |
விருதுகள் | Zoological Society Silver Medal (1989) பரடே விருது (1990) கிஸ்ட்லர் பரிசு (2001) |
குறிப்புகள் | |
Fellow of the Royal Society Fellow of the Royal Society of Literature |
குமுக (சமூக) மானிடவியல் துறைக்கும் படிவளர்ச்சி மானிடவியல் துறைக்குமான உரையாடல்களில் இவரது கருத்துக்கள் படிவளர்ச்சி மானிடவியல் சார்ந்தே முன்வைக்கப்படுகின்றன. 2006 ஆம் ஆண்டில் டாக்கின்சு எழுதிய தி காடு டில்யூசன் (The God Delusion) என்ற நூல் பெரும் விவாதத்தை உருவாக்கியது. அதில் எப்படி உயிரியலில் மரபணு (Gene) என்பது அடிப்படைக் கூறாக உள்ளதோ அதுபோல பண்பாட்டுக்கு அவர் 'மீம்' (Meme) என்ற புதிய கருதுகோளை அறிமுகப்படுத்துகிறார். இதனைத் தலைமுறை தலைமுறையாக செலுத்தும் பண்பாட்டின் மரபணுக்கூறு (Unit of Cultural Transmission) என்று கூறுகின்றார். மரபணுக்களுக்கு ஈடாக- இன்னும் அதற்கு மேலாக- உருவகப்படுத்தப்பட்ட இக்கருதுகோள் தொடர்பான கருத்துரையாடல்கள் "அறிவுயிரிகள்" நடுவில் பல காலங்கள் தொடர்ந்தது.
ஏற்கனவே உளவியல் வல்லுநர்களான யூங் (Young) போன்றோரால் கூறப்பட்ட மரபணுவியல் உளப்பகுப்பாய்வு என்னும் கருதுகோள் இதுசாரப்பட்டதே. இனம் சார் கருத்தியல்களும் மதம்சார் கருத்தியல்களும் இதனூடு கடத்தப்படுகின்றன என்பது இவரது வாதம். சமூக மானிடவியலாளர்களை மேவும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட கருதுகோளே மீம் என்ற கருத்து டாக்கின்சு பற்றிய விமர்சனங்களில் கூறப்படுகின்றது. டாக்கின்சு ஒரு இறைமறுப்பாளர்.
இறைமறுப்புக்கு ஆதரவாகவும் தீவிரமாக செயற்படுபவர்.
ரிச்சார்ட் டாக்கின்சு, கென்யாவில் உள்ள நைரோபியில் பிறந்தார். கென்யாவில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு பிரிட்டனின் குடிமகன் ஆவார். அவர் தந்தை இங்கிலாந்தின் குடியேற்ற ஆட்சியின் வேளாண் குடிமை அதிகாரியாகக் கென்யாவில் பணியாற்றினார்.
1962 இல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் பட்டம் பெற்றார். நோபல் பரிசு வென்ற பண்பாள்மையிலாளர், நிக்கலாசு டின்பேர்கனின் மாணவராக பயின்றார்.
டாக்கின்சு தன்னை இறைமறுப்பாளர் என்று அறிவித்துக்கொண்டவர். சிறுவயதில் கிறித்தவத்தில் இருந்தாலும், டார்வினை அறிந்த பின், மத நம்பிக்கைகளை இழந்தார். பரிணாமத்தை புரிந்து கொண்டதே, இறைமறுப்புக்கு வித்திட்டது என்று தெரிவித்துள்ளார்.
மத நம்பிக்கைகள் ---- தரவுகள் ஏதுவும் இல்லாத மூடநம்பிக்கைகள்----உலகின் மிக மோசமான தீவினைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.