From Wikipedia, the free encyclopedia
மகாராஜா சர் ராமேஸ்வர் சிங் தாக்கூர் (Rameshwar Singh Thakur) (1860 சனவரி 16 - 1929 சூலை 3) இவர் 1898 முதல் தான் இறக்கும் வரை மிதிலா பிராந்தியத்தில் தர்பங்கா மகாராஜாவாக இருந்தார். இவர் குழந்தைகள் ஏதும் இல்லாமல் இறந்த தனது மூத்த சகோதரர் மகாராஜா சர் இலட்சுமேசுவர் சிங் இறந்த பின் மகாராஜா ஆனார். 1878 ஆம் ஆண்டில் இந்திய குடிமைப் பணியில் நியமிக்கப்பட்டார். தர்பங்கா, சாப்ரா மற்றும் பாகல்பூரில் அடுத்தடுத்து உதவி நீதபதியாக பணியாற்றினார். குடிமை நீதிமன்றங்களில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட இவர் 1885 இல் வங்காள சட்டமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். துணைநிலை ஆளுநரின் செயற்குழுவில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் இவராவார். [1]
ராமேசுவர் சிங் | |
---|---|
பிறப்பு | தர்பங்கா |
பட்டம் | மரியாதைக்குறிய |
முன்னிருந்தவர் | மகாராஜா லட்சுமேசுவர் சிங் |
பின்வந்தவர் | மகாராஜா காமேசுவர் சிங் பகதூர் |
சமயம் | இந்து சமயம் |
இவர் 1899 ஆம் ஆண்டில் இந்திய தலைமை ஆளுநரின் இந்திய அமைப்பின் உறுப்பினராக இருந்தார். 1904 செப்டம்பர் 21 அன்று மும்பை மாகாணத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ண கோகலேவுடன் வங்காள மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். [2]
பீகார் நில உரிமையாளர் சங்கத்தின் தலைவர், அகில இந்திய நில உரிமையாளர் சங்கத்தின் தலைவர், பாரத் தர்ம மகாமண்டலியின் தலைவர், மாநில அமைப்பின் உறுப்பினர், கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவுச்சின்னத்தின் அறங்காவலர், இந்து பல்கலைக்கழக சங்கத்தின் தலைவர், பீகார் மற்றும் ஒரிசா மற்றும் இந்திய காவல் ஆணையத்தின் உறுப்பினர் (1902-03) போன்ற பதவிகளை வகித்தார். இவருக்கு 1900 இல் கைசர்-இ-ஹிந்த் என்றப் பதக்கம் வழங்கப்பட்டது. காவல் சேவைக்கான தேவைகள் குறித்த அறிக்கையை எதிர்த்த இந்திய காவல்துறை ஆணையத்தின் ஒரே உறுப்பினராக இருந்த இவர், இந்திய காவல்துறை சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு என்பது ஒரே தேர்வின் மூலமாக மட்டுமே இந்தியாவிலும் பிரிட்டனிலும் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆட்சேர்ப்பு தேசியத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்றும் இவர் பரிந்துரைத்தார். இந்த ஆலோசனையை இந்திய காவல் ஆணையம் நிராகரித்தது. [3]
மகாராஜா ராமேசுவர் சிங் ஒரு தாந்த்ரீகர் மற்றும் பௌத்த சித்தர் என்று அழைக்கப்பட்டார். இவர் தனது மக்களால் இராஜரிஷி என்று கருதப்பட்டார். [4]
இவருக்குப் பிறகு இவரது மகன் சர் காமேசுவர் சிங் அரியணைக்கு வந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.