From Wikipedia, the free encyclopedia
ராபர்ட் ஈ. ஓவார்ட் அல்லது ராபர்ட் ஈ. ஹோவார்ட் (Robert Ervin Howard, ஜனவரி 22, 1906 – ஜூன் 11, 1936) ஒரு அமெரிக்க எழுத்தாளர். பல்வேறு பாணிகளில் காகிதக்கூழ் புனைவுகளை எழுதியவர். கோனான் தி பார்பாரியன் என்ற கற்பனைப் பாத்திரத்தைப் படைத்ததன் மூலம் உலகப்புகழ் பெற்றவர். கனவுருப்புனைவுவின் வாட்களும் மாந்திரீகமும் (swords and sorcery) உட்பிரிவின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
ராபர்ட் எர்வின் ஹோவார்ட் | |
---|---|
பிறப்பு | பீஸ்டர், டெக்சாஸ், அமெரிக்கா | சனவரி 22, 1906
இறப்பு | சூன் 11, 1936 30) குராஸ் பிளெயின்ஸ், டெக்சாஸ், அமெரிக்கா | (அகவை
புனைபெயர் | பட்ரிக் மாக்கோனயர், ஸ்டீவ் கோஸ்டிகன், பாட்ரிக் எர்வின், பாட்ரிக் ஹோவார்ட், சாம் வால்சர்[1][2] |
தொழில் | எழுத்தாளர் |
வகை | வாட்களும் மாந்திரீகமும், மேற்கத்தியப் புனைவு, குத்துச்சண்டைக் கதைகள், வரலாற்றுப் புனைவு, திகில் புனைவு |
இலக்கிய இயக்கம் | விசித்திர புனைவு, வாட்களும் மாந்திரீகமும் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோனான் தி பார்பாரியன், தி ஹவர் ஆஃப் தி டிராகன், "வார்ம்ஸ் ஆஃப் தி எர்த்", "பீஜியன்ஸ் ஃபிரம் ஹெல்ஸ்" |
கையொப்பம் | |
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஹோவார்ட் தனது 23ம் வயதில் முதல் படைப்பினை வெளியிட்டார். அதன் பின்னர் பல இதழ்களிலும், செய்தித்தாள்களிலும் அவரது கதைகள் வெளியாகின. முக்கியமாக வியர்ட் டேல்ஸ் என்ற காகிதக்கூழ் இதழில் இவரது பல படைப்புகள் வெளியாகின. படைப்புலகில் வெற்றி கண்டு தனது முதல் புதினத்தை பதிப்பிக்கும் வேளையில் தற்கொலை செய்துகொண்டார். அவருடைய தாய் காச நோயினால் பாதிக்கப்பட்டவர். அவரது உடல்நிலை மோசமாகி ஆழ்மயக்க (கோமா) நிலைக்குச் சென்று விட்டார் என்ற செய்தி கேட்ட ஹோவர்ட் தனது முப்பதாவது வயதில் தனது தலையில் துப்பாக்கியில் சுட்டு இறந்து போனார்.
சில வருடங்களே இலக்கியப் படைப்பில் ஈடுபட்டிருந்தாலும், ஆங்கில இலக்கிய உலகில் ஹோவார்டின் தாக்கம் மிகப்பெரியது. அவர் உருவாக்கிய கோனான் தி பார்பாரியன் பாத்திரம் உலகப்புகழ் பெற்றது. கனவுருப்புனைவுப் பாணியில் ஜே. ஆர். ஆர். டோல்கீனுக்கு இணையான தாக்கம் உடையவராக ஹோவார்ட் கருதப்படுகிறார். டோல்கீன் உயர் கனவுருப்புனைவு பாணியின் தந்தை என்று கருதப்படுவது போல ஹோவார்ட் வாட்களும் மாந்திரீகமும் பாணியின் மூல கர்த்தாவாகக் கருதப்படுகிறார். 20ம் நூற்றாண்டில் பல அறிபுனை, கனவுருப்புனைவு எழுத்தாளர்களின் படைப்புகளில் ஹோவார்டின் தாக்கம் தென்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.